அருள் நூல் 991 - 1020 of 2738 அடிகள்

அருள் நூல் 991 - 1020 of 2738 அடிகள்

arul-nool

ஒன்றுமூணு நாலுஏழு ஆடும்படி சொல்வேன்
மண்ணளந்த மாயனுட விவரமநாடுஅறியவும்
பித்தலாட்டப்பயல்களெல்லாம் பெருமை குலைந்து போகுதே
அல்லாவென்று நபியைத்தேடி அலைந்தபேர்கள் சடுதியில்
மூணுநாளை ஆட்டுக்குள்ளேமுன்னும்பின்னும் அடைக்குமே
காவல்காத்த மக்களெல்லாம் கைலயங்கிரி காணுங்கள்
விரைவாகு முடியும்சூடி வெள்ளியங்கிரி ஆளுவோம்.

சாட்டு நீட்டோலை முற்றிற்று

பத்திரம்

அய்யா சீசருக்குச் சொன்னது


தர்மசீசர் தன்கையிலேதான் கொடுத்து வாமகனே!
நாம், காப்பிட்டகையைகச் கடுகச்சொல்லும் பேர்களுக்கு
நாம், கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன்மகனே!
நாமாடி வந்த ஆட்டமெல்லாம்
அறைக்குள் பூந் தொளித்துயினி
ஆட்டமில்லாக்கூட்டம் இனக்கூட்டம் தேரோட்டம்.
அந்தந்த தலங்களிலே ஆடுமந்த பேர்களையும்
ஆடாமலேயிருந்து அறிவுசொல்லி வாமகனே!
இது, பரலோக வார்த்தையெல்லாம் பூலோக வார்த்தையில்லை,
இதை,
மெய்யென்று சொன்னவர்க்கு மேலோகம் தோணப்படும்.
அம்மையுமை பார்வதியும் அறிவுசொன்னாள் என்மகனே
பள்ளியறை தனிலேவந்து பகர்த்தெழுதிதான்கொடுத்து
இது உள்ளபடி யென்றுசொல்லி உகந்துவா என்மகனே
நாம், கூப்பிட்டுக்கொண்டு சமுத்திரத்துக்குள்ளிருந்து
நாம், கூப்பிட்டுக்கேட்டு குற்றம் தெளிவிப்பேன் மகனே!
கடைசியில் ஒருபதிதான் கடலுக்குள்ளிருக்குதப்பா.
அது துவர யம்பதிதான் துலங்கும்பததியதுதான்.
சட்டங்களும் கூட்டங்களும் தானமா னங்களும்,
அதை,
பெற்றவருக்குக் கிட்டிக்கொள்ளும் பேதகமில்லை மகனே!
பக்தியுள்ள மக்களுக்கும் புத்தியுள்ள மக்களுக்கும்
பயங்கள் தெளித்துவைப்பேன் பதறாதே என்மகனே!

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi