அருள் நூல் 631 - 660 of 2738 அடிகள்
மாறிப் பார்த்தவனைத் தாலியறுத்துக் கட்டென்று
வசைகூறி விட்டாரையோ சிவனே அய்யா
நலமுனி யிங்கிருந்து நருள்கள் அறியும்படி
நான்செய்த கோலம்சொல்வேன் சிவனே அய்யா
அடுத்தாரைக் காப்பதற்காய் பூவண்டன் தோப்பதிலே
அமர்ந்து யிருந்தேனய்யா சிவனே அய்யா
பொன்பழுப் பானதொரு தங்கத் திருமேனி
புண்ணா உளையதய்யா சிவனே அய்யா
மெல்லுட தாகியதோர் நல்லுடலில் அழுக்கு
மெத்தவும் பற்றலாச்சே சிவனே அய்யா
அடங்காத கலியைநான் அடக்க வந்ததினாலே
அழுக்குமே பற்றலாச்சே சிவனே அய்யா
வாடுதே யெந்தனுள்ளம் மயங்குதே திருமேனி
வரவர வாடுதய்யா சிவனே அய்யா
குலைத்த தலையுடனே சலித்த முனிக்க
குறுக்கும் கடுக்குதய்யா சிவனே அய்யா
பொருதவில்லும் வைத்துநான் கூட்டுக்குள்ளிருந்த
புளுங்குதே மேனியெல்லாம் சிவனே அய்யா
அங்கமும் காந்துதே அனலாகி யெந்தன்மேனி
அய்யய்யோ யென்னசொல்வேன் சிவனே அய்யா
எங்கெங்கும் விசையாச்சே தவமுனி யான்யிருக்கும்
கோலம் கண்டாயோ சிவனே அய்யா
கொங்கையில் பால்கொண்டு காராவும் வந்துநின்று
குடிக்கவும் சொல்லுதே சிவனே அய்யா
மாதாவும் பால்தந்து அனேகநாள் ஆச்சுதே
வயிறும் பசிக்குதையா சிவனே அய்யா
கப்பல் சிறிதெனவும் கடல்தான் பெரிதெனவும்
கவிழ்ந்து இருக்கலாச்சே சிவனே அய்யா
பாம்பும் படம்விரித்துப் படல்கொண்டு வீசுதையோ
பாதமும் காந்துதையோ சிவனே அய்யா
விளக்கவுரை :
அருள் நூல் 631 - 660 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi