அருள் நூல் 271 - 300 of 2738 அடிகள்
விதிதனைப்பார்த்து வேதன் விளம்புவார் வைந்தரோடு
துதியொடுயெழுத்தும் உந்தன் சுருதியும்கேள்மோ அய்யா
ஆதி நாராயணர் தானிந்த அழிகலி யுகத்தில்தானே
பதிகுண்டர் வந்தவன்றே பசாசுகள் ஒழிந்துபோனார்
பேயோடு பசாசுகூளி புரட்டொடு கலிகள்நீசம்
மாயொடுகபடு கள்ளம் மனக்கருப்பு யுகங்கள் தீர்ப்பு
பொய்யொடு புரட்டு வஞ்சப்பிழை பொல்லாப்பென்றதெல்லாம்
வாயொடு வாயால் கெட்டு மறுப்பில்லாப்போனார்
நாரணர் வைகுண்டமாகி நாட்டினில் வந்தவன்றே
காரண மெல்லா மாச்சு கலியுகமழிந்து போச்சு
பூரண வேதநூலும் புராணமுன் ஆகமங்கள்
சாரமுங் கெட்டுப்போச்சு சதாசிவம் குண்டராச்சே
அழிவகை அழித்துத்தள்ளி அவரொரு சொல்லுக்குள்ளாய்
கழிவரை யெழுத்தை யூன்றிதோகைமா தவரும் ஆகி
வழிதன்னில் வன்னியாகி வகுத்திடும் மகவோராகி
அழிவில்லாப்பதியை ஆள ஆகமத்துரை தானேயென்றார்.
ஆனதால் ஆகாதென்ற அவ்வகையிதுநாள் சாக
ஏனமு விது தானென் றியம்பிட்ட வேதன்தானும்
மானமாய்க்கேட்டு வைந்தர் வானவர் சாட்சியென்று
தானவர் கணக்கில் ஊன்றிசத்தியாய்ப் பதித்தார் அன்றே
கணக்கினில்யெழுதி கொண்டு கருத்தினில் அடக்கிவைத்து
இணக்கியே இவரையெல்லாம் இலக்குலக்கதிலே கொல்வோம்
பிணக்கியே கோலம்தானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கிலா கயிலையாளி கொடுகலி யுகத்தோரெல்லாம்.
உகசவ வானோர் தேவர் ஒருவரும் போகவேண்டாம்
வகையுடன் நானே செய்யும் வழிதனைப்பாருமென்று
இகபரம் முதலாயிங்கே யிருமென சாட்சிவைத்து
பகைசெய்த கழிவையெல்லாம் பார்த்தெரித்திட வுற்றாரே.
உச்சிப்படிப்பு
சிவசிவா அரிகுரு சிவசிவா
சிவசிவா ஆதிகுரு சிவசிவா
விளக்கவுரை :
அருள் நூல் 271 - 300 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi