அருள் நூல் 481 - 510 of 2738 அடிகள்
மற்றும் விடைகள் பெற்று வருகிறார் எங்கள் அய்யா’
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாட்டை நொடித்த கலீனீசன் முடியை
இறக்கி நாராயணர் பதியாள்வார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கல்லைப்பிளந்த கணபதி நாராயணம்
செப்பைத்திறந்து திருமுடிசூடி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அக்கனியால் அழிப்பேனென்று சொல்வது மெய்தானப்பா
அனல்வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வது மெய்தானப்பா
ஆபரணமலை அணிவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
ஆடிக்கள் ஆடி ஐமூன்று நாழிகைக்குள்
அறிந்தவர் அறிந்திடுங்கோ அயல்ஓடிப்போகுமுன்னே
தெரிந்தவர் தெரிந்திடுங்கோ எங்கள் அய்யா
திரைகடல் ஓடுமுன்னே அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
பணிந்தவர் பணிந்திடுங்கோ பாலன் பதியேறுமுன்னே
துணை மலையொன்று நம்பினபேர்க்கு
தொட்டு நாமம்சுற்றி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
தொழுத மதலையைக் கண்டு
தொழுது பணிந்து நடந்தவர்க்கு
நாடு நமக்கென்றுயெடுத்துக்கொடுத்து ஆளவருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கும்பிட்டு தவம் செய்வதற்குக்
கோட்டைதலம் காட்டிக்கொடுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
அருள்கொண்டு முடிசூடியிருள் கொண்டு
படையறுக்க வருகிறார் எங்கள்
விளக்கவுரை :
அருள் நூல் 481 - 510 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi