அருள் நூல் 31 - 60 of 2738 அடிகள்
பூமகளைச் சேர்ந்து வாழ்ந்து வருவதற்கு
அடையாளம் உலகில் நடக்கும்
என்பால் பக்தியாய் இட்டசட்டபடி நடங்கள்
நான் வருவதற்கு அடையாளம்
பின் வாசகத்தில் அடங்கியிருக்கிறது.
விருத்தம்
கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி
மலையொடு மரையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு
சிலையோடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே
அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்
கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண
மீறிய மொழிகள் பேசி விளம்புவார் னாச மாவார்
தேறிய பூதத்தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார்
கூறிய மொழியை யுள்ளம் கொண்டவர் குருவைக் காண்பார்.
ஒரு திரு விபூதி உருண்டை ஒருயிரு மிச்ச மாகும்
ஒருதிடத் தேங்காய்ப் போலும் ஒரு மனத் திரணை போட்டு
கருதிட வெற்றிலை பாக்குக் களித்திடுவார்க்கு மூவர்
வருதிட ஞானம் மெய்யின் வழியிது வாகுந் தானே
மனுமொழி மிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு
இனிதல்ல வீண்தா னென்று விளம்பிய பகை!ர் தன்னைத்
தனியவள் துர்க்கை சென்று கொன்றவள் நகரம் பூத்தி
கனிவுடன் துர்க்கை வாரிகடல் தீர்த்த மாடுவாளே.
நடை
எறும்புக்கடை யானைமுதல் யெண்பத்து நான்குயிர்கள்
ஏழுகடல் பதினாறு புவிகளும்
இரவிமதி சூரியர் பருதிபாலாழியவும்
இசைவான வாய்வு முதலாய்தோறும்
மாமலையோடு மாமரச் சோலையும் சேடனும்
தலை மோடனும் அறியவே
தென்கீழத் தேவரும் இங்குள்ள மூவரும்
தேசதெய் வேந்திரம் அறியவே
வாத முனி யோர்களும் வேதசன்னியாசியும்
விளக்கவுரை :
அருள் நூல் 31 - 60 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi