அருள் நூல் 2161 - 2190 of 2738 அடிகள்

அருள் நூல் 2161 - 2190 of 2738 அடிகள்

arul-nool

தாசியாட்டமுண்டு சான்றோர்பார்க்கத் தம்பிரான்கற்பித்தேன்
ஆனைமேல் ஏறிநீங்கள் அற்றகுற்றம் பார்ப்பதுண்டு
சீதனம் விட்டுத்தாறேன் தெய்வேந்திரன் அங்குண்டு
கலியுகத்தில் வேலையில்லை கண்மணியே உங்களுக்கு
ஆலங்காய்நெல்லிவிளையும் அரிசிசிறு தானியமுண்டு
அமுததேற்றங்கொள்ளாலேமே ஆசாரம் அங்கேயுண்
கோவங்காய் பாகற்காய் கொழுந்துவரை அங்கேயுண்டு
சத்தியவாக்காய்ச்சொல்லுகிறேன் தம்பிரான்கற்பனையாய்
தலைவாசலானதிலே தலைதூக்கி மயிர்பிடித்து
கற்புடையராசன்வந்து கண்ணாடி வைத்துபப் பார்த்தான்
என்பேரில் குற்றமில்லை இழுத்துப்புதைக்க பிள்ளையில்லை
அப்படியேபிள்ளகைளே அணைத்தார்பால்கோட்டையிலே
இரண்டாம்முடிதரிக்க நீராவிக்கரைகளுண்டு
சங்குசக்கரமுண்டு தம்பிமாரே உங்களக்குக்
கன்னியிலேவந்திருந்து மேல்நோக்க நாமந்தருவேன்
சித்திரத்தாலதிகமுள்ள தோழருமங்கேவுண்டு
பஞ்சவரே உங்களுக்கு வஞ்சகமாய் சொல்லவில்லை
மாயவலைக்குள்ளிருந்து நடுஞாயம்தீர்த்துவாறேன்
திட்டித்தநாள்முதலாய்ச் சிலகாலம் தவசிபண்ணி
பால்காவடிவேண்டாமென்று பண்டார மிங்குவந்தேன்
ஒன்றுநான்கேட்கவில்லை உனக்குத்தெரியும்தாயே
சின்னம்சிறு மதலையாகத் தோப்பதிலே தவசிருந்தேன்
பிச்சிப்பூ அச்சுமாலை பொரியவல் கேட்கவில்லை
நல்லெண்ணெய் பிண்ணாக்கு ராசாவும் கேட்கவில்லை
தெய்வகன்னி பெற்றபிள்ளை செடிதோறும் அலைகிறாரே
பேய் எச்சி தின்றுஅவர் பேய்போல் அலைகிறாரே
நானானேன் தானானேன் தந்தேநன்னம் தந்தேநன்னம்
நாகம்போலே உள்ளபேயை நல்லதீயாலெரித்தேன்
மந்திரம் மாற்றிவைத்தேன் மாறானதைச் சாபமிட்டேன்
கருத்துள்ள ஈசுவரியேக் கண்டுகொண்டு பார்க்கவேணும்

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi