அருள் நூல் 2671 - 2700 of 2738 அடிகள்
பேய்க்குக் கொடுத்திடுவார் அச்சமுடன்
தெண்டமதற்கிடுவார் வஞ்சமறநாடு வுயர்ந்துவரும்
நாள்தோறும் பூமியெல்லாம் காடுந்தணிந்துவரும்
கண்டிருங்கோ வெள்ளி இடிகளாய் விழுமாம்
வில்போடும் மாறிமாறி வேளாண்மை குன்றிவரும்
மேல்மேலும் வெள்ளமது பெருகும் மேகத்திலே
இருந்து மீனும்விழும் மழையிலே மேகமதாய் வில்லும்
வெவ்வேறாகிவிடும் ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி
குன்றிவிடும்தாக்குப் பொறுக்காது ஜனங்களுக்
ஆயள்தான்குறையும்
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசாயிருக்கிறான்
மாமன்நானிருக்க மனம்போல் நடத்துகிறான்
அவன்பட்டம் பறித்திடுவேன் கொட்டிக் கலைத்திடுவேன்.
நாரணனும்
முற்றிற்று
கல்யாணவாழ்த்து
மவுனி கலியாண மணவோலை வாழ்த்தலுக்கு
சிவனே குருவான திருமேனி முன்னடவா
அய்யாவும் நாரணரும் அம்மை உமையவளும்
தெய்வார் தமக்கிரங்கி திருமுகூர்த்தம் செய்யவென்று
அண்டரோடு தேவர் அறியவே ஓலையிட்டு
கொண்டாடியின்பம் குளிர்ந்தநதி பாலதுபோல்
சீரானமக்களென்றும் தெய்வச்சான்றோர்களுக்கு
நாராயணர் தாமும் நல்லமுகூர்த்தமிட்டு
கன்னிக்கலியாணம் கைப்பிடிக்க வேணுமென்று
மன்னனுக்க யேற்றுமதி மந்திரியும் தானறிய
இவனிவளாமென்று யினங்குறித்துப் பெண்பேசி
அவனியறிய அலங்கார மிட்டனரே
கட்டுடைய பந்தலுக்குக் காலொன்பது நாட்டி
பட்டுமேற் கட்டியெனப் பந்தலிலே தான்வகுத்து
சில்விளக்கேற்றிச் சிறந்தபரி பூரணமாய்
நற்சுதி கண்பாட நடசாலை யும் வருத்தி
விளக்கவுரை :
அருள் நூல் 2671 - 2700 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi