அருள் நூல் 601 - 630 of 2738 அடிகள்

அருள் நூல் 601 - 630 of 2738 அடிகள்

arul-nool

மெய்யை நிலைநிறுத்திப் பொய்யை அடியழிக்க
விடைதந்தனுப்பினாயே சிவனே அய்யா
உகத்தை முடிப்பதற்கு அகத்திலும் செவியிலும்
உபதேசம் வைத்தாயே சிவனே அய்யா
எத்தனையோ முனிவன்பெற்ற வரமும்கொண்டு
இங்கே நான்வரும்போது சிவனே அய்யா
தாய்கிழவிக்குக் கொஞ்சம்  அதிசயங்களைக் காட்டி
சத்தியமும் கொண்டேனையோ சிவனே அய்யா
உள்ளுக்குள் அருமைவைத்துப்பிறருக்கு கையெபொத்தி
உடமைந்த மாநகர் வந்தேன் சிவனே அய்யா
பேயன்போவதை அன்னாபாருங்கோ வென்றுசிலர்
பிதற்றியும் வைகின்றாரே சிவனே அய்யா
சிலமதலைகள் கூடியெனவைத தெருவிலே
சிமினை யேவிவிட்டேன் சிவனே அய்யா
கல்கொண்டு எறிந்துவந்த மொட்டையர் தெருவிலே
கருடனை யேவிட்டேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
அந்தக் குசர்கடந்து அப்பாலே வரும்போது
அவன்சொன்ன தென்னசொல்வேன் சிவனே அய்யா
காலதிலே மிகவும் தூசி யிருக்குதென்று
காலைநான் கழுவினேன் சிவனே அய்யா
தூளைக் கழுகுறாயே காலை வளைத்துந்தான்
தோள்மேலே போடென்றானே சிவனே அய்யா
இந்தப்படியேவாசை செவியிலும் நான்கேட்டு
இங்கேநான் வரும்போது சிவனே அய்யா
சொந்தப் பனையேறக் கண்டு பனைஏறி
வயிறுபசிக்கென்றாரே சிவனே அய்யா
பாலில் சுண்ணம்போட்டுக் குடியுமென்று சொல்ல
பாலா யிருந்ததய்யோ சிவனே அய்யா

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi