அருள் நூல் 61 - 90 of 2738 அடிகள்

அருள் நூல் 61 - 90 of 2738 அடிகள்

arul-nool

மறையாறு சாஸ்திரம் அறியவே
மண்டலம் மளந்தகை கொண்டெழுதும் வாசகம்
மண்டலர்கள் எவரும் அறியவே
வரும்பகல் தொள்ளாயிரத்து தொண்ணுற் றெட்டாண்டினில்
வளர்சாம்ப சிவமூர்த்தியும் மகாபரசுராமரும்
பராபர ஸ்ரீராம மூர்த்தியும்
பதியேறும் மூர்த்தியும், வண்மைபார்த்திக் கலியிலே
பார்த்திந் தக்கலியுகத்தில்
படூரநீ சக்கிலியால் வரும் வாது வண்ணம்
பகர்ந்து திருவாசகம் எழுதி
பல நன்னூல் அறிந்தவர்கள் எவர்களும்
பக்தியுடனே எதய காலமும்
பணிந்து திரு வாசகம் முந்தியணைந் தோருக்கு
மிகுபல னுடாகிய மேன்மையும்
நத்தியுடன் பூலோகக் கலியுகா தேசத்தில்
நடக்கும் முறையைக் கேளீர்.

திருவாசகம்

நல்ல வீரபுரம் தர்மராசா வழியிலே
நாடும் ஒரு மதலை பிறந்து
வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே
நாங்கள் வாலிபப் பிள்ளையாயிருக்கிறோம்
பூலோகக் கலியுகத்திலே
ஆசாரமாய் இருக்கிறபேர்களும்
அழுக்கான புத்திமதியா யிருக்கிறபேர்களும்
வரவர ஆங்காரமாய் அலைந்து அழிந்து போவார்கள்,
அதின்மேல்; பதினெட்டுதுர்க்கை அம்மன் பிறந்து
பூலோகக் கலியுகப் பஞ்ச அமிர்தராச்சியத்திலே வருகிறார்.
வந்தவுடன் மூன்றுநாள் இருள்மூடி
யானை துதிக்கையோல் மழைபெய்யும்
அதிலே சிலதுர்ச்சனர்கள் எல்லாம்
மாண்டு போவார்கள்

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi