அருள் நூல் 1261 - 1290 of 2738 அடிகள்
பத்திரத்தைப் பள்ளியில் வைத்துப்பகர்ந்துகொடு நீமகனே,
இப்படி, உத்தரவுதந்தேன் உகந்து வா மகனே!
சத்தியமாயிருக்கவேணும் சண்டைபோடாதே மகனே!
அவரவர் கூடுதமட்டும்உள்ளதர்மம் தந்ததை வாங்குங்கடா மகனே!
இந்தப் பத்திரத்தைப் பள்ளியிலே தானும்வைத்துப் பணிவிடைகள்
செய்திடுங்கோ!
புத்திர பலன்களுண்டாம் பூமிவிளைந்துவரும்.
சத்தியமாயிருக்கவேணும் தர்மபதிகிடைக்கும் என்மகனே.
தர்மசங்கத்தார் தர்மம் வளரும்.
தர்மராசர் தர்மபுவி ஆளுவார்.
அம்மையார் பத்திரம்
பையன்மார் பத்திரம்
சீசன்மார் பத்திரம்
திருநெல்வேலிமார் பத்திரம்
பால்விறகுப் பத்திரம்
அய்யாபதி உட்படப் பத்திரம்
முட்டப்பதி பத்திரம்
பள்ளத்துப்பதிப் பத்திரம்
தாமரைக்குளம்பதிப் பத்திரம்
பூப்பதிப் பத்திரம்
செட்டிக்குடியிருப்புப் பத்திரம்
அகத்தீசுவரம் பத்திரம்
பாலவூர் பத்திரம்
சுண்டவிளைப் பத்திரம்
வடலிவிளைப் பத்திரம்
உன்பரக்கொடிப் பத்திரம்
பற்பலஊர் ஜனங்களுக்கும் கூடியபத்திரம்.
அய்யா சீசருக்குச் சொன்ன சிவகாண்ட அதிகாரப்பத்திரம்
அய்யாபதியில் வடக்கே முகமாயிருக்க
சீசர்தெற்கே முகமாகநிற்க
அரிகோபலனும் கைகட்டி மனப்பயங்கரமாய் நிற்க
விளக்கவுரை :
அருள் நூல் 1261 - 1290 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi