அருள் நூல் 2491 - 2520 of 2738 அடிகள்

அருள் நூல் 2491 - 2520 of 2738 அடிகள்

arul-nool

மகாமேரு போறைந்து வாசமாக்கொண்டார்
எந்தபேரும் வந்திழுத்து சந்துபொந்துபோக
எட்டுதிசைதோறும் கிடாய்வெட்டிப் பலியிட்டார்
இட்டகிடா ரெத்தமெல்லாம் துட்டவீரருண்டு
இனும்போதாதென்றுபலி பின்னுங்கொள்ளைகொண்டார்
முட்டடங்கா கயிலைபையன் மாயன்மகாலிங்கம்
வாழும் பலவேசக் கயிலாசவீரனோடு
சட்டமாக இட்டபலி உண்டுத்தேரைத்தொட்டு
தங்களாலே ஆகாதென்று சங்கடங்கள் கொண்டார்
வட்டமிட்டவீரருட பொட்டுமிகப்போச்சு
வாரமுள்ளவீரமெல்லாம் சொரம்போச்சுதங்கே
என்னகேடு ஆச்சுதென்று யேங்கி அஞ்சுபேரும்
ஏழையான பத்திரமாகாளியிடம் சொல்வோம்
பொன்னழகி எங்களையும் பெற்றவளேயம்மா
புட்டாரநாயகியே கட்டழியம்மா
இத்தனைநாள் யெங்களாலே யோலாதொன்றுமில்லை
ஏழுகடல்தாண்டி யுலகாண்டிருந்தோம் அம்மா
முத்திபெறும் அக்கினித்தூண்முழுவதும் கையிலெடுத்தோம்
மூன்றுலோகம் சுற்றிபின்னும் மீண்டுகொண்டு வந்தோம்
வெள்ளிமலை மீதிலுறை அரசனுடையமகளே
அஞ்சிரண்டு மாசத்திலே பிஞ்சியீரல் உண்டோம்
மாடனருள் அண்ணாவி மாமலையில்சென்று
மாய்மாலமாய்மாய மந்திரத்தைப் பொய்த்தோம்
சுட்டுசுருக்கான பலதுட்டமா கணத்தை
கண்ணில்காணாமலரைக் காற்றாய் பறக்க வைத்தோம்
பூமிகயிலாசம்வரை எங்கள் பேரல்லால்
பின்னுமொரு துட்டவீரர் கண்ணில்காணோமம்மா
மாயனுக்கும் ஆயனுக்கும் மாமறைக்கும் தாங்கள்
மற்றும்பல தேவதைக்கும் யேற்றுக்கொண்டோம் அம்மா
பேய்கள்பல பேர்களுக்கும் பெருமாளாக வாழ்ந்தோம்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi