அருள் நூல் 1561 - 1590 of 2738 அடிகள்

அருள் நூல் 1561 - 1590 of 2738 அடிகள்

arul-nool

கங்கைபால் வற்றுமப்பாகிழவன்பண்டாரம் சொல்லுகின்றேன்
வெட்டவெளிதனில்மக்காள்வேலி பயிராகுதப்பா
ஊரோட்டம்தேரோட்டம் மக்காளொன்றுவட்டம் ஆகுதடா
மாரிவெள்ளம் அழிக்குதடா மாயாண்டி சொல்லுகிறேன்
கூத்தாடிக்கூத்தாடி நான்கொள்ளிவைத்துப் போவேனடா
கொள்ளிவைக்கும்குமரனடா கொப்பன்நந்தி யீசனடா
பள்ளிக்கணக்கனடா நான் பள்ளியிலே ஆடிவாறேன்
கங்கைநீர் ஆடிவாறேன்கிழவன் பண்டாரக்கூத்தாண்டி
வெள்ளானை மீதிருந்து விளையாடிப்பாடுகிறேன்
துரியோதனனுக்கு நாரதமுனி வாறேன்நான்
பாட்டனும் பூட்டனும்நான் பாரசித்த பிச்சைக்காரன்
நேரில் பிரியமும்நான் பேதைக்கோலம் மாறியும்நான்
அஞ்சாடு மேய்த்தடைத்த ஆனந்தக்கோன் வந்தேனடா
கூடாரத்துக் குள்ளிருந்து குலவிசை செய்திடுவேன்
நான்பாவி பொல்லாதவன் நாட்டில்ஒருவருக்கும் ஆகாது
கோட்டிகொண்ட பித்தனடா குடிகொடுக்ககுருவும்நான்
உன்கூட்டுக்குள்ளிருந்து குறிபலதும்சொல்வேன் நான்
தேராண்டியப்பா நான் தெருவீதி ஆடிவாறேன்
கைலாசம் தனிலிருந்துபல காரணங்கள் முடிக்கவந்தேன்
ஆணானேன் பெண்ணானேன் அடங்காத சொருவமானேன்
அஞ்சாடு மேய்ந்திருந்தஉங்களுக்கு ஆடபேறாய் நானிருந்தேன்
கஞ்சிவெள்ளம் கொடுக்கவுங்கள் கனவிலும் எண்ணமில்லை
ஒடுங்கிவிட்டேன் ஆடுமேய்த்து ஒருபலனும்கண்டதில்லை
இனிகடுவாய்க்கிரையாக காட்டிக்கொடுத்திடுவேன்
கும்பி கொதிக்குதடா எனக்கினி குடியிருக்கலாகாது
போவேன் கைலாசம் பின்அடி மாதத்திலே
முன்னாடி பின்னாடி முழுதெய்யாத ஆடியானேன்
கண்டபொருள் திரவியங்கள் காணாமல் போகுதடா
அஞ்சுவீடு அழியுதடா ஆண்டிநான் என்னசெய்வேன்
பஞ்சவர்ண மேடைகளும் பள்ளிவாசல் அழியுதடா

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi