அருள் நூல் 1171 - 1200 of 2738 அடிகள்
சீதனமாய் உங்களுக்குநான் தந்தேனடாமகனே
சித்திரை மாதத்திலே செழித்தமழை பெய்யுமடா
பத்திரமாயிருந்து பணிவிடைகள் செய்திடுங்கோ
புத்திரன் நானொருவன் புத்திசொல்ல வந்தேனடா
வற்றாத பொய்கையிலே வாழுமந்தகுரு நாட்டில்
புத்திசொல்ல வந்திருந்து புலம்புகிறேன் நான்சுவாமி
கண்டகுறி சொல்லுதற்காய் கண்ணுறக்கம் நானுமில்லை
இந்தவிதிப்படியே வந்தேனடா நான்மகனே
எல்லோர்க்குங்கிட்டாது சொன்னேன் என்மகனே
பேய்செடிக்கு கொடுத்தவனை பிரம்பெடுத்துநானடிப்பேன்
ஆயிரத்தெட்டாம் மாசியில் வந்தங்கேபுத்தி சொன்னேன்
இதுவரைக்கும் புத்திசொல்லி என்வாயும் சடைந்துபோச்சு
இனி, சட்டங்களும் கூட்டங்களும் சமயங்களும் வருகுதடா
பெட்டகத்துத் திரவியமும் போய்விடுமோ என்மகனே
கட்டில்களும் நாருகளும் சட்டங்களும் போகுமடா
ஏரும்சீரும் ஆடுமாடும் போகுமடா என்மகனே
தெச்சணாப்பதியில் நான் தேரேற வந்தேனடா
காரணத்தைக்கேட்டமட்டும் கண்ணுறக்கம் தானுமில்லை
பூரணக்கேற்றபடி பூமிசெழிக்குமடா என்மகனே
வாதாடிவந்தவர்க்கு வழக்கறுத்து வைப்பேன் சுவாமி
நீராடிப்போகவேண்டாம் நெடுமால் திருக்கடலில்
ஓரடியாயளந்தமாயன் உலகமாள நாம்வருவோம்
பாதியடிகேட்டதற்குப் பங்கில்லையென்று சொன்னான்
சீறியவனைப்பார்த்ச் சினந்துவிட்டேன் மாவலியை
மாலயன் இடத்தில்வந்து மயங்குகிறான்மாமுனியும்
ஓரோலையெழுதுமட்டும் ஒளித்திருந்தேன் மாமுனியும்
கந்தல்துணி கழுத்திலிட்டும் காத்திருந்தேன் மாமுனியும்
சொந்தகிளை நானுனக்குச் சோறுதரவந்தேனடா
அட்டமந்திரமும் சாத்திரமும்மறைந்துபோகும் என்மகனே
இந்தவிதியுனக்கு இருத்திவைத்தேன் கலியுகத்தில்
விளக்கவுரை :
அருள் நூல் 1171 - 1200 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi