இதரப் பதிகள்
“பதி” என்ற சொல்லுக்கு அகராதிகள் உட்செல்லுதல், அழுந்துதல், முத்திரை, படிதல், நிலைத்தல், கணவன், தலைவன், இறைவன், எனப் பல பொருள்களைத் தருகின்றன. அய்யா வழியினர் இறைவன், தலைவன், தலைமை என்னும் பொருளிலேயே “பதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர் எனலாம்
பதிகள் ஏழு காணப்படுகின்றன. அவை சுவாமித்தோப்புப் பதி, முட்டப்பதி, தாமரைகுளம் பதி, அம்பலப் பதி, பூப்பதி, வாகைப் பதி, துவாரகா பதி என்பன. இவற்றில் சுவாமித்தோப்புப் பதி, முட்டப்பதி, தாமரைகுளம் பதி, அம்பலப்பதி, பூப்பதி ஆகியவை அய்யா வைகுண்டரால் தோற்றுவிக்கப்பட்டவை. இவையே ஐம்பதிகள் என்ற சிறப்புப் பெற்றவை.
வாகைப் பதி அய்யா வைகுண்டர் முதன்முதலில் “துவையல் பந்தி” நடத்திய இடம் என்பதால் அதனையும் பதிகளில் ஒன்றாகக் கூறுகின்றனர். “துவாரகா பதி” பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
இன்று வழக்கிலிருக்கும் ஏழு பதிகளில் சுவாமித்தோப்புப் பதியையே தலைமைப் பதியாகக் பக்தர்கள் கூறுகின்றனர். இதற்கு மாறாக தாமரைகுளம் பதியைச் சேர்ந்த அய்யா வழியினர் தாமரைகுளம் பதியே தலைமைப்பதி என்று கூறுகின்றனர்.
அகிலத்திரட்டு அம்மானை தாமரைகுளம் பதியிலேயே வைத்து அரிகோபால சீடரால் எழுதப்பட்டதைக் கருத்தில் கொண்டு தாமரைகுளம் பதியைத் தலைமைப்பதி என்று கூறுகின்றனர்.