அருள் நூல் 2131 - 2160 of 2738 அடிகள்
என்னையொன்றுசொல்லதே இறையவனும் அறியலையோ
வெகுநாளாய்வந்திருந்து வேண்டும்புத்தி சொன்னேன்நான்
ஒன்றும் அறியாமல் விழுகிறானே தீயதிலே
சொல்லிவிட்டேன் கேட்கவில்லை என்னுடைய நம்பிமாரே
அறட்டி மடக்கிக்கொண்டு முடுக்கிகொண்டிருக்கிறானே
தவமிருக்கும் இடமதிலே வலமிடமா றாட்டம்வைத்தான்
பொய்ரதத்தை ஓட்டிவைத்தான் பூலோகம் தான்நடுங்க
பஞ்சவரே வெகுநாளாய் வருத்திநான் தீர்த்துவிட்டேன்
குட்டம்குறைநோவு கொடியதீனம் தீர்த்துவிட்டேன்
கண்குருடு கால்நொண்டி கர்மமுதல் தீர்த்துவிட்டேன்
தெச்சணா பூமியிலே தென்குமரி நன்னாட்டில்
வெகுநாளாய் வந்திருந்து மக்களுக்கு புத்திசொன்னேன்ங்
எத்தனையோ வெகுநாளா யியருந்துபுத்தி சொன்னேன்
அப்பனில்லா பிள்ளையது அதிகபிள்ளை யானதுதான்
செப்பரிய தாய்க்கிழவி சேர்ந்தாளே யெடுப்பதற்கு
இடுக்கமில்லை யினிமேலும் வெண்ணெயுண்டு நீளுதடா
தெப்பக்குள மிங்கமுண்டு திருமால் கற்பிச்சியிருக்கு
பிராமண வேசம்பாட பத்தன்மாரே நீங்களுண்டு
பொன்னாலே பூனூலும் தங்கத்தாலே சாலுவையும்
கடுக்கண்திருக் காணியில்லை கலியுகத்தில் வேலையில்லை
பொன்னரும்பு வேலைசெய்யப் பூமியில்தட்டானுமில்லை
பொன்னரிய கன்னபெற்ற பிள்ளைகள் வந்ததுண்டால்
குறுணிப்பொன்னிடுவதற்கு கொடுத்துவைத்திருக்குதப்பா
பட்டமர சாளக்கோடிமக்க ளுண்டு பாவனையாய்நான் கொடுப்பேன்
எல்லார்க்கு மொருப்போல ஈசன்நான் யிருக்கிறேன்
சொற்பெரிய ராச்சியத்தில் சீமைகாட்டி ஆளலாமே
குதிரைகட்ட லாயமுண்டு கோடிச்சீமைகட்டலாமே
அதிகமுள்ள ராச்சியத்தில் அமுதேற்றுத்கொள்ளலாமே
கண்ணாடி பார்த்தப்பட்டு கடியதுகியில் ஆடையுண்டு
குளிர்கால ஓட்டமுண்டு கொடிவிருதுக் கட்டமுண்டு
விளக்கவுரை :
அருள் நூல் 2131 - 2160 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi