அருள் நூல் 1381 - 1410 of 2738 அடிகள்

அருள் நூல் 1381 - 1410 of 2738 அடிகள்

arul-nool

ஆதிபரன் சித்து வித்தை மண்ணால்
உனைமனைந்து பலமாய் கையினால் உனைவகுத்தேன்
உந்தன் பலங்குலைக்க உலகில்பெண்ணை வகுத்துவிட்டேன்
உண்டாக்கிவைப்பதுநான் உலகில்அழிப்பதும் நான்மகனே
ஏகமதாய் நிறைந்தபரன் இருந்துலகை அளுகிறார்
கண்ணுமக் காள்என் சூத்திரத்தைக்
கண்டறிந்து பாருங்கப்பா
பதிமூன்றுக் குள்ளிருந்து பாடுகிறேன் சிவகாண்டம்
இரவுபகல் வேலைசெய்தாலும் யீசன்வேலை முடியாதப்பா
இருபத்தி மூன்றுதெய்வம் யீசனெங்கும் வடிவானேன்
இருமூன்று தனியுகங் ஈடளித்த மாயனப்பா
இருபத்தி நாலாயுகம் இருந்துபுத்தி சொல்லுகின்றேன்
இருபத்தி ஐந்தாயுகம் எழுந்திருந்து வந்தேனப்பா
ஐம்பதிக்குள் அதிசயம் தான் அறிந்திருங்கோகண்ணுமக்காள்
குடியிருந்து ஐந்துயுகம் கொள்ளிவைத்து போறேயனப்பா
ஒன்றிரண்டு ஐந்துக்குள்ளே உலகடக்கி அரசாள்வீர்
இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி சொல்லுகிறேன்
இருபத்திரண்டு காரணம்ஈசன்சொன்னேன் சிவகணக்கு
மூன்றுபத்து இரண்டறம்நான் வளர்த்தேன் கலியுகத்தில்
நாள்தோறும் மிரண்டுஅறம் நாதன்வேலை செய்தாலும்
அதற்கு தண்ணீர் ரதுதான்கொடுப்பா ரில்லையப்பா
அண்டத்திலோரம் தான்நாதன் சொல்லுகிறேன் தப்பாது
அண்டபகிரண்டம்வெல்லவொரு ஆயுதம்வந்திருக்குதப்பா
இட்டவாளுக்கிரையாக இருக்கிறார் சத்துருக்கள்
திருச்சம்பதி அழியுதடா திருமாலுஞ் சொல்லுகிறேன்
எட்டுத்திசை வட்டக்கோட்டை கட்டுமுட்டாயிருக்குதடா
மச்சமுனி நானுமப்பா மாயச்சொருபமறிவாயோ
ஊமையானேன் செவிடானேன்
பித்தனானேன் பேயனானேன்
என்பெருமையெங்கும் அறிவாரில்லை

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi