அருள் நூல் 2401 - 2430 of 2738 அடிகள்

அருள் நூல் 2401 - 2430 of 2738 அடிகள்

arul-nool

சொல்லும்மாயங்கள் யிங்கவர் கண்டிடும்
மார்க்கமாகவே நாலுவேதத்திலும்
மாறாட்டியே வெகுபூசையுண்டவர்
பன்றிகோழி பலிபல தானதும்
பார்த்துச்செய்வோரை காத்துக்கொள்ளுவார்
அன்றிநித்தம் அவரை தொழாது
அதட்டுவோரை உருட்டியே கொல்லுவார்
மூடும்கண்கள் விழிப்பதற்குள்ளாக
உலகம்ஈரேழும் உலாவித்திரிபவர்
வாசமான வடவா முகத்திலே
வன்னிசெந்தழல் ஆவிகுளிப்பவர்
தேசமெங்கு மவரல்லால் வேறில்லை
கொல்லும் வரிசைக்க வாள்வல்லவர்
வேசமானால் பலது கொண்டாடுவார்
வெற்றிவீரர் வெகுபுத்திக் காரராம்
ஆனதாலவர் அருகில்வந்தாக்கால்
அட்டதுட்டிக்கு இடமல்லோ ஆக்குவார்
ஈனம்சற்றும் இரக்கம் கிடையாது
ஏற்றமாலோனே யோதுதான்சொல்கிறீர்
ஆகுமோ அந்த பேர்களமக்கென்றார்
ஐந்துபேரையுமிங்கே அழைக்கிறேன்
பாகுசெநாpந்தஈசர் உரைத்திட
பண்டுமாலும் பகுத்துரை செய்வார்
நல்லமாமறை மைத்துணரானவர்
நாட்டிலிப்படி கோட்டிகளாக்கிடில்
செல்வமாகிய தெச்சணம் மீதினில்
சென்றுநான்தவன் செய்துநிறைவேற்றி
அன்பரானமனுக்கள் தொpந்துநான்
அரசேயாள வரம்பெற்றதெப்படி
இந்தமாஞாலா பேர்களிருந்தக்கால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi