அருள் நூல் 181 - 210 of 2738 அடிகள்
ஆதித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் மனமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் மனமே கண்டு கோமலர்ப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடு சிறப்புட னிருந்து வாழ்வார்
திருமொர் வாசகந் தன்னை சீமையில் வரு முன்னாக வருவது திடனா மென்று
வழுத்தினோம் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டாண்டில்
ஒருதிருக் கூட்டமாக ஓராயிரத்தெட்டாமாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே.
வருத்தினோம் அம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாகக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோர் அவர்க்கே தக்கும்
உருத்தில்லா கேட்போ ராகில் ஒருவரை வெளியே காணார்
சிரித்துரை கேட்போ ரெல்லாம் சிவப்பொருள் வெளியே காண்பார்
உலகில் மனுக்கள் தமிழாலே உவமை உரைத்து விட்டதுபோல்
கலக முடனே யென் மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகை துளைத்து நரகத்தில் ஆணி அறைந்து அவனிதனில்
குலய குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே.
எந்தன் மொழியும் யென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில்
சிந்தை மகிழ்ந்த அன்பருக்கு தெரியத் திடமாய் எழுதிவைத்தேன்
எந்தப் பேரும் என்மொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும்
சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியும் காண்பாரே.
காண்பார் தர்மக் கண்காட்சி கண்டே மரணமில்லாமல்
காண்பா ரென்றும் களிகூர்ந்து கண்ணோன்பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராயக் கவ்வையுற்றுக்
காண்பா ரென்றுங் கைலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே
இந்த மொழியைத் தூசணித்த யிடும்பர் படும்பா டதுகேளு
கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணும் உருகிக் காலுழன்று
குந்தக் குடலும் பிரம்பூர கொப்புள் சிலந்தி உண்டாகி
எந்த விடமும் திரிந்தழிவார் என்னாணை யிதுவே தப்பாதே.
தப்பா தெனவே ஆணையிட்டேன் சத்திபேரில் உண்மை யதாம்
எப்பா ரெல்லாம் மறிந்திடவே இந்தமொழியை யெழுதி வைத்தேன்
விளக்கவுரை :
அருள் நூல் 181 - 210 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi