முத்திரிக் கிணறு
அய்யா வழி பதிகளில் தலைமைபதியாக திகழும் சுவாமிதோப்பு பதியில் அமைந்துள்ள முத்திரிக்கிணற்றை அய்யா வைகுண்டர் ஏற்படுத்தினார். அக்கிணறு பல்வகை சிறப்புகளை உடையது. முத்திரிகிணற்றின் தோற்றம் பழங்காலத்தில் பொதுகிணற்றில் நீர் எடுப்பதற்க்கும் குளிப்பதற்க்கும் மக்கள் சிலருக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட அய்யா வைகுண்டர் "முத்திரிக்கிணற்றை" தன் பதிகளில் ஏற்படுத்தினார்.
பக்தர்கள் புனிதமாகவும், நோயின்றி வாழவும் அய்யா ஏற்படுத்திய கிணறு முத்திரிக்கிணறு ஆகும். அய்யாவழியின் முன்னேற்றத்தில் பொறாமை கொண்ட கலிநீசர்கள் அய்யா ஏற்படுத்திய கிணற்றில் நஞ்சை ஊற்றி கொல்ல முயன்றனர்.
அய்யா வைகுண்டர் "பால்" என்று அருந்துபவர்களுக்கு "பாலாகவும்"; "நஞ்சு" என்று நினைப்பவர்களுக்கு "நஞ்சாகவும்" இருக்கும் என்று கூறினார். பக்தர்கள் "சிவ சிவ சிவ சிவா அரகர அரகரா" பாடி அந்த முத்திரிப்பதத்தை அருந்தியதால் அது அவர்களுக்கு இனிய அமிர்தமாக தித்தித்தது.
தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிக்கிணறு" பல்வேறு சிறப்புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் முத்திரிப்பதம் இட்டு(குளித்து); முத்திரி பதத்தை அருந்தி; முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ சிவ சிவா அரகர அரகரா" என்று அய்யா வைகுண்டரின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும்.
முத்திரிக்கிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிக்கிணற்றில் பதம் இடுபவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீரும் என்பது ஐதீகம். அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும்.
முத்திரிக்கிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுத்தத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெறுவார்கள். அதை அருந்திய பிறகு மனதில் உள்ள மாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் அய்யா வைகுண்டரை பற்றிய எண்ணங்களே தோன்றும்.
பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடையும். பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிப்பதம்" திகழ்கிறது. உடல் நோய்கள், தோல் நோய்கள், உடல் வலிகள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத் தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உளநோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது. இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிக்கிணற்றில் அன்பர்கள் பதமிட்டால் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகளை உடையது "முத்திரிக்கிணறு" அனைவரும் வருக, பதம் இடுக அய்யாவின் அருள் பெருக! அய்யா உண்டு!