அருள் நூல் 1201 - 1230 of 2738 அடிகள்

அருள் நூல் 1201 - 1230 of 2738 அடிகள்

arul-nool

ஆண்மூட்பும் பெண்மூப்பும் அதிகப்பட்டு போச்சுதடா
இன, என்மூப்புதானுமுண்டு எவர்மூப்பும் செல்லாதே
பார்வதியும் அவறொருத்திப் பங்குண்டு என்று சொன்னாள்
அதுசீதனம் கொடுத்துப்போச்சு சிரிக்க வேண்டாம் என்மகனே
பள்ளியிலே தானிருக்கும் பள்ளியறைக் காவல்கார என்மகனே
உள்ளபடி நானுமிப்போ உபதேசம் சொல்கின்றேன்
பள்ளியிலே யிருந்து
பலபேர்க்கும் புத்திசொல்ல நாம்வருவோம்
பள்ளிக்கூடம் சோதிக்க
உத்தரவு நாம்கொடுத்தோம்மகனே
தர்மசீ சரை முன்னேவிட்டு சுவாமியும் நாம்வருவோம்
என்னுத்தர வோடேயுன் உத்தரவும் சொல்மகனே
நீயும்தான்
திருப்பிரம்பை பைக்கொடுத்து நீயனுப்பு என்மகனே
நீயனுப்பாவிட்டால் நான்
கூட்டிக்கொண்டு போய்விடுவேன் மகனே
என்னை, குற்றமென்றும் சொல்லாதே என்மகனே
இப்படி, கணக்கினைக் கற்பித்தகணக்கென்று
சொல்லிவா என்மகனே
ஆணும்பெண்ணுங் கூடி ஆசாரம் செய்தடுங்கோ
தானதர்மம் செய்துகொண்டு தழைப்பீர்கள் நீங்கமக்காள்.
மகனே, வட்டவட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க
பட்டங்கள் தந்தேனடா பதறாதே என்மகனே
உன், உச்சக்கிரகமடா ஒருவருக்கும் தெரியாது.
உன், பச்சமுண்டால் போதுமடா
பகையெனக்கு இல்லையடா.
யாருக்கும் பதறாதே அச்சமில்லை என்மகனே
ஏடுதந்தேன், உன்கையிலே எழுத்தானியும் கூட தந்தேன்.
மகனே, பட்டயமும் தந்தேன் பகைதீர்த்தேன் பதறாதே
இனி, நமக்கொடு ஒழுங்குவேணும்.

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi