அருள் நூல் 2581 - 2610 of 2738 அடிகள்
வஞ்சப்பெருங்காற்றால் வையகத்தில் சஞ்சலநோய்
தீநகரக்காந்தல் செகத்தோர்க்குத் தான்வயிற்றில்
மாநெருப்பாய்த்தங்கி வயிறுகழிந்து தீனமுடன்
மாள்வார்சிலபேர்கள் மாறாமலேசிலநாள்
தாழ்வாருயர்வார் தான்கெடுவார் கோள்சண்டையாலே
சாவார்கள் அழிவார்கள் உண்டெனவே…
இரத்தமிகவோடவே மண்டலத்தில்…
நாடுபிழையாது நற்காலம்போயொழிக்கும்
கேடுதொடுத்துலகம் கெட்டுவரும் நாடுதனில்
மழைதழைத்துப்பெய்யாமல் வானம்சுருங்கிவரும்
களைகள் பயிரில் கலக்கமேவிளையாது
வெள்ளத்தால் பஞ்சம்வரும் வெண்சாவியாகி விடும்
பள்ளத்தாலும்நெற்பயிர் நடுக்கும் சனங்களுற்ற
பட்டணங்கள்தோறும் பசிநோய் அதிகமதாய்
வட்டிஅநியாயம் வாங்கிடுவார்தட்டழிந்து
பிள்ளையுடன் கொண்டபெண்ணைப் பேறாகவிற்றிடுவார்
தௌ;ளிமையாய் கள்ளச்சிறைகள் வைப்பார்
வள்ளவிலாச் சூதுவிளையும் கடுஞ்சொல்களவும்
பொய்பெருத்து மாதருள்மேல் மோகமுற்று
வாடுவார்நீதமுள்ள ஞானங்கள்தப்பிவரும்
நாய்போல்சினந்திடுவார் ஊனக்கொலைபுரிவார்
ஓயாமல்தீனதிய திருட்டுப்பெருத்துவரும்
சீமையெல்லாம் புரட்டுமுரட்டாகப் பேசிடுவார்
மருட்டியேஎன்தன் பணத்தை யிப்போது
தாவென்றுசொல்லிசிந்தை கலங்கிடவேசெப்பிடுவார்
நந்தலுறம் பொய்யாணைவிட்டிடு வார்பொய்ச்
சத்தியமே பெருகும் மெய்யோனைத்தேடாமல்
விற்றிடுவார் வையகத்தில் ராஜனவன்கைக்கூலி
நடத்தியே வாங்கிடுவான்பேசிடுவான் ஞாயப்
பிழையாக ஆசையுள்ள அண்ணனுக்கு
விளக்கவுரை :
அருள் நூல் 2581 - 2610 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi