அருள் நூல் 2641 - 2670 of 2738 அடிகள்
மேல்மழைகள் தான்கூடி மரத்துக்கொப்பு
நனைத்துவிடும்நாடி ஒருகொப்பு னையாது
மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிண்டு
மூன்றுவரும் கோஎன்று பெட்டைக்கூவிவிடும்
நீசரால் வெள்ளத்தினால் சிலவூர்வேகுமே பள்ளமதாய்
தாழுமேசிலவூர் சமுத்திரம்வந்தே பெருகும்மாளும்
சிலவூர்மகிழ்ச்சியுடன் ஆளறிய அக்கினியாலே அழியும்
சிலவூர்கள் இக்குடனேமண்மாரி பெய்துவிடும்
நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய் நாள்தோறும்
வந்து பாசாங்குமந்திரியும் பாவிகளாய் கூசாமல்
பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில்
மண்ணாலும் நித்தம்மடிவார் முன்னோர்கள்
உண்டுபண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமெனக்கை யெடுப்பார் சண்டாளர்
குட்டியழித்திடுவார் கொல்லுவார் கொண்டவனை
முட்டியவர் தாயைமகன் கொல்லுவான் கெட்டுவிழ நெஞ்சுடனே
பேயால் நாடும் மருந்தாலே துஞ்சிவிடும்மாற
பில்லிசூனியத்தால் அஞ்சாமல் கொன்றிடுவார்
பாவமதாய் கூர்மையுடன் பாராமல் பன்னி உருக்காட்டி
பலியாகும் நன்றிகெட்டு தீவைப்பார் பகையால்
தீங்கான நோய்பெருகும் பான்மை வையகம்பாழாகும்
ஏவல்செய்ய சின்னபிள்ளைகள் சிற்றின்பம் செய்திடுமே
மண்ணில் சடைவாக வார்த்தை சொல்லும்
பின்னும் மந்தப்பாவம் பிணிகருத்தாய் பாலருகில்
மானிடர்க்கு காவலுருப் புண்ணியங் கசப்பாகும்
மேவரிய ஒருத்தனுடன் ஒப்பத்தெட்டு பேர்கள்
திருத்தமறவே திரிவார் தேசமதில்
வருத்தமாய் தேடிநித்தம் குருதாய் தகப்பன்
கூறுமொழிகேளார் திருத்தமுடனே சிவத்தைத்
தேடார்கள் கருத்துடனே பிச்சையது போடாமல்
விளக்கவுரை :
அருள் நூல் 2641 - 2670 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi