அருள் நூல் 2341 - 2370 of 2738 அடிகள்

அருள் நூல் 2341 - 2370 of 2738 அடிகள்

arul-nool

கதைப்பாடத் திருமால் காப்பாம்
அண்ணன் தம்பியோடைந்து பேரும்
அருளால் சிவவேடமுந்தாpத்து
ஒண்ணு போலொரு சொல்லதுவாய்
உடைய அன்பவரைத் திறமாய்க்காக்க

வண்டத்தனம் பேசும்வன்பர்களே
வாணன் வதைத்திந்த கலியுகத்தில்
கொண்டே யிருட்கலி தனையறுத்து
கூண்டபதிக்கோட்டைக் கொத்தளமும்

துலங்கா பதிகளும் துலங்கவைத்துத்
தொணும் சிவாலயம் காத்தாண்டு
பெருமைமிகு ஆடை பால்பழமும்
பொpய மணிமேடை அம்பலமும்

நன்மை பலதான வரிசையுடன்
நாரணர் சட்டம் மீறாமலே
ஒழுங்காய் உலகினில் ஒருசொல்லாக
உண்மை பலசெய்தாரதை

முழுதும் காவியமாய் படிப்வர்க்கு
முதலோன் அருள்தந்து முன்நிற்கவே
கருரெனும் வீரர் கருடராசன்
கடியகமண்டல சிமளராசன்

துட்டரெனும்வீரர்; தேர்த்தகனும்
குட்டிவீரனும் தேர்க்குடையோன்
அன்பர்க்கனுகூல மாவீரன்
அஞ்சுபேர்க்கதை அன்பாய்கூற

வாரபிழையொன்றும் வாராமலே
வாயில்வந்திங்கே வகுத்துரைப்பார்
சீராய்ச் சரவணம் மேல்துயிலும்
செந்தில் வேற்குரு கந்தப்பரே
கந்தக்கருங்குhல் தெய்வமாது

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi