அருள் நூல் 2461 - 2490 of 2738 அடிகள்
உபாயமாய் வீரர்தம்மை வரவழைத் திங்கேகொண்டு
ஞாயமாய்ப் பிறவிசெய்து நாரணர் கைக்குள்ளாகக்
நோயமாய் மனதிலலெண்ணி நினைத்தனர் ஈசர்தானும்
நடை
அட்டதிசையெங்கும் கீர்த்திபெற்ற அஞ்சுபேரையும் இங்கழைக்க
அருமையானஇங்கழைத்து உரிமையாக இப்போது
மெட்டித்தனமாக முன்னீந்த வரம் வேண்டி
மேலுந் தா;மாரிக்கு ஏற்றவிடை ஈயவென்று
மாலுரைத்தமொழி தவறாவண்ணம் செய்யவென்று
மனமகிழ்ந்து தானும்வெகு உபாயம் எடுத்தார்
மேலும், கந்தசாமி யவர்க்கு மாசியெட்டாந்திருநாள்
மேனமைதனைப் பார்ப்பதற்கு நாமும் போவென்றே
போகவேணுமென்றுசொல்லி பொக்கணங்களிட்டு
பொpயபுலித் தோலுடனே வரிவேலை யுமெடுத்தார்
கையில் மழுசூலம் காப்பறைகளேந்தி
கண்டந்தனில் பண்டமாலை கொண்டுபூண்டு சென்றார்
மெய்யில் வெண்ணீறணித்து உத்தராட்சம்பூண்டு
மேன்மைபொற்கரத்தில் செம்புமுந்திரிதூக்கி
தாவடமும்மேவிடத்தில் தாவண்ட சங்காரன்
சண்முகம் திருநாள்வேளைதன்னில் போவென்றே
கோவிடத்தில் வாழுகின்ற குருவசிட்டரானார்
கூண்டபல தேவர்களும் கொடியாகச்சூழ
பூவுலகில் உள்ளதேவர் போதவந்துசூழ
பேய்பிடாரி பூதகணம் புட்டாரக்காளி
நாவுலகில் உள்ளதே நான்முகனும்சூழ
நாட்டில்வரம்பெற்ற வெகுதாட்டிமையோர்
ஏவல்பொpயோர் களெல்லாம் யீசுரரைப்போற்ற
ரிடபவாகனமேறி யீசர்சென்றாரங்கே
செல்லும்வேளை கந்தனுக்கு தீபரணைகாட்டி
தேருவடந்தனைப்பிடித்துத் தெருவீதிவந்தார்
வந்ததேர் உச்சிதனில் மாயனிருந்தாண்டார்
விளக்கவுரை :
அருள் நூல் 2461 - 2490 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi