அருள் நூல் 781 - 810 of 2738 அடிகள்

அருள் நூல் 781 - 810 of 2738 அடிகள்

arul-nool

சடையுதே யெந்தன்மேனி சிவனே அய்யா
நற்பால் குடிக்கிறாரென றெல்லோரும் சொல்லுவார்
நான்கேட்ப தறிவாரா சிவனே அய்யா
எந்தெந்த நேரமும் இருந்திருந்த மாமுனிக்கு
இடுப்பும் கடுக்குதையா சிவனே அய்யா
அக்கினியால் நீயச்சொன்ன சக்கிலியான் தலையின்னும்
அற்றுவிழவில்லையே சிவனே அய்யா
என்னைப்பழித்தவன் தன்னடைய கூரையிலே
இன்னும் இருப்பானோ சிவனே அய்யா
கண்ணில் அடித்தானே அரனே குருவேயிந்த
கலியிலிருப்பானோ சிவனே அய்யா
கும்பிக்கிரைதேடிக் கொடுப்பார் முகம்பார்த்து
கூடித்திரிந்ததுண்டோ சிவனே அய்யா
பாலென்று குடித்ததில் நீரென்று சொல்லியதில்
பாசாணம் போடலாச்சே சிவனே அய்யா
பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா
என்மக்கள் சான்றோர்கள் இடுப்பிலெடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா
குலபாதகன் செய்த நியாயத்துக்கு கோபங்கள்
செய்ததுண்டோ சிவனே அய்யா
தேவர்கள் எல்லாரும் கயிலாசத்திலிருந்த
தேர்கொண்டு அழைக்கிறாரே சிவனே அய்யா
இதெல்லாம் வேண்டாமென்று எந்தன் மக்களுக்கா
இருந்தேன் சிறையதிலே சிவனே அய்யா
ஆனாலும் இன்னும்கொஞ்சம் சான்றோர்படும்துயரம்
ஆறுமோ தேறுமோ சிவனே அய்யா
நாட்டு முறையைப்போல காசியும் காணிக்கையும்
நான்வேண்டி தின்னதுண்டோ சிவனே அய்யா
திருமேனி திருக்கண்ணை சற்றே திறந்துவிட்டால்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi