அருள் நூல் 2281 - 2310 of 2738 அடிகள்
வடகடலும் அழக்கிறதே வானம் இடியுதடா
பூமிவெடிக்கிறதே மலைகள் இளகுதடா
சுழல்காற்றுவருகதப்பா தேசம்விட்டு ஜனம்ஓடுதடா
மண்ணறைக் குள்ளிருக்கும் மாயாண்டி வெளிவருவேன்
அப்புவியை அரசாளவரும் போது சம்பூர்ணத்
தேவரைத்தானெழுப்ப அய்யாவும்
உம்பர்தனைவதைத்த வையகத்தில் வரும்போது
அன்பான மக்கள் தனை
அருள்புரிந்து அய்யாவும்
மாரிபொழயவைத்து மக்கள் பஞ்சம்தீர்த்து
ஆழிபெருகி அவனியெங்கும் அய்யாவும்
தரணியில்வந்து தயவுசெய்து என்னசொல்வார்
வள்ளியாற்றுக்கு மேற்கு வாரியால் தானழியும்
கோட்டாறு அங்கே கொள்ளையினாலழீப்போம்
சுசீந்திரம்ட ஆறுடைந்து சுத்தகதி ஆகுதங்கே
ஆறுடைத்துத்தேரும் அன்புடனே தெற்குதர
தாமரைகுளம்பதியும் தண்ணீராய் போகுமங்கே
கழிக்கரையைத் தானழித்துக் கடற்கரையில்முழித்து
கன்னபெற்ற பிள்ளையுழும் கருத்தாகவேகூடி
கூடிஅய்யா குரபரா றாயணமுனியும்
தெற்குவடக்காய் திருப்பதியும் தோணுமென்றார்
ஈரேழுகாதம் இருக்கதுகாண் துவாரகையும்
வடக்குவாசல் துலங்குதுகாண் அம்பலமும் அம்பலத்தில்
நாரணரும் அரசிருக்க வாறோங்காண் வாறோமென்று
வாக்குரைத்தார் மக்களுக்கு அய்யா.
பஞ்சதேவர் உற்பத்தி
காப்பு
விருத்தம்
சீரணிகொன்றை சூடும் சிவனுடைய பாதம்போற்றி
நாரணர் மனுப்போலிந்த நகா;க்கலியுகத்தில் வந்து
போரணிமனுக்கள் யாவும் பேணியோர் தலத்துள்ளாகி
காரணமகிமை காட்டிக் கருத்துள்ளம் தற்காத்தாரன்றே
பொறுதியாய்த் தர்மநீதி புலனுள்ள மனுக்கள்யாவும்
விளக்கவுரை :
அருள் நூல் 2281 - 2310 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi