அருள் நூல் 1 - 30 of 2738 அடிகள்

அருள் நூல் 1 - 30 of 2738 அடிகள்


arul-nool

அய்யா வருகையின் முன்னறிவிப்பு


அறம்பழுத்த கனிரசமே கலியறுக்க மானிடராய்
மகரமதுள் வைகுண்டம் தோன்றி
திறம்பெருத்தோ மென்றுகலி பிடித்து அவரவரே
நமக்குமேல் ஒன்றுமில்லை யென்றார்
பரங்கனிதான் கலியதனுள் ஐந்து ஒன்று
கவங்களித்துக் கலிதன்னால் சாக
மனம்பொறுத்த சான்றோரைக் காப்பேனென்றார்
வான்முனியும் நான்முகனும் வரமீன்றாரே.
                                                                         - பழம்பாடல்

காரணமான மாயன் கலியுகம் வரவென் றெண்ணி
நாரணம் பயந்து ஓடி நல்மலை யேறி மானாய்
வேடன்கை அம்பால் செத்து வில்வேந்தர் முதலோர் காண
தரணி வாறோ மென்று தவலோகம் சேர்ந்தார் மாயன்
                                                                         - இடைக்காடர்

அகிலத்திரட்டு திருவாசகம்

வரும்பகல் தொள்ளாயிரத்து தொண்ணூற்றெட்டாண்டில்
பரலோகச் சங்கம் கூடிக்
கலியுகக் கொடுமை அதிகமென்று கண்டு
திருவாசகம் எழுதிப் பார்ப்பர் வசம் அனுப்பி
சகலரும் தெரியும்படி சொல்லச்
சொல்லா திருந்ததினாலே
திருவாசகத்தின் படி
ஆயிரத்தியெட்டாமாண்டு
திருச்செந்தூர் பாற்கடலில் பிறந்து
விஞ்சை பெற்று
மூன்றாம்நாள் கரைசேர்ந்து
பூவண்டன்தோப்பில் ஆறுவருடம் தவமிருந்து
பின்
தண்ணீர்மண்ணால் சகல நோயைதீர்த்து இருக்கும் சமயம்
இராசசோதனை கழித்துப்பின்
சத்தக் கன்னியைச் சேர்த்து
எழுமதலை கொடுத்து
சான்றோரைக் காப்பேனென்று உத்தரவு செய்து

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi