அருள் நூல் 1231 - 1260 of 2738 அடிகள்
நாம்சொன்னோம் மாமுனியும்
என், பள்ளியிலே வைத்திருந்தேன் பாதையில் போகவிட்டேன்.
கொடியேறும் நாள்தொடங்கி ஏழுநாள்
பிச்சை வாங்குங்கோ மகனே!
சுரையோடு கையிலெடுத்து எல்லோரும்
கூடிச்சேர்ந்து போய்விடுங்கோ.
சராசரத்தைப்போற்றித் தானதர்மம் செய்திடுங்கோ.
நல்லவர் இட்டதர்மம் நாள்தோறும் பொங்குமடா.
தர்மம், தந்தவனும் நல்லவன்தான்,
தராதவனும் நல்லவன்தான்.
நல்லவனும் பொல்லா தவனும்,
யெல்லாரும் நல்லவனென்று சொல்லிவிடு.
எட்டாம்நாள் வேட்டையாடி வருவேனடா நான்சுவாமி,
அகப்பட்டதைக் காப்பிட்ட மகன்கைக் கொடுத்து
உனக்கெனக்கும் பகையில்லையடா யுகபழிந்துபோனாலும்.
உன்னைப்போல் சுந்தரன் ஊரிலும்நான் காணேன்.
வட்டவட்ட சாலையிலே வாறவழிப் போக்கினிலே,
நீயுமுன்கூடச் சேர்ந்த ஜனங்களும் இட்டதர்மம் பெருகுமடா.
நாட்டைத்தான் ஒடுக்குதற்குக் கொடுத்தவரம் பறிக்கவாறேன்
நான்மகனே!
மந்திரவாள் தான்வாங்கி இந்திரனும் பதியேறி,
சந்திரனும் சூரியனும் சண்டைப்போட்டுத் தேசம்வாறார்.
இந்திரனார் சுந்தரர்க்குத் தாம்கொடுத்தோம் மாமுனியும்
இந்த, புதுச்சட்டம்வந்திருப்பதினால் நல்ல புத்தியாயிருந்து விடுங்கோ
நல்லபுத்தியிருக்காவிட்டால் பிழைகள்வரும் உங்களுக்கு
பற்பல ஊர்களிலேயிருக்கும் நிழல்தாங்கல்களில் என்மகனே
பள்ளியிலேதானும் வைத்துபணிவிடைகள் செய்திடுங்கோ.
சீசன்மார் கைக்கொடுத்து தெளிந்துபார் என்மகனே!
பள்ளிக்கூடங்கள்தோறும் பதிவாக நீங்கள்போய்
இதை சொல்லுங்கடா என்மகனே மாமுனியும் சொன்னேன் நான்.
விளக்கவுரை :
அருள் நூல் 1231 - 1260 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi