அருள் நூல் 1861 - 1890 of 2738 அடிகள்

அருள் நூல் 1861 - 1890 of 2738 அடிகள்

arul-nool

கண்ட அகமகிழ்ந்து நல்லகாரிகை கன்னியர்ஏழுபேரும்
பண்டுமறைந்தநிதி நல்லபண்பாகக் கண்டபாவினைபோல்
வந்துகுளிர் காயந்தது நல்லமங்கைஎயெழுபேரும் போவோமென்று
பந்துதனம் உடையாரந்த பாவையேழுபேரும் சம்மதித்து
வந்துமிகக்கனலை வட்டமிட்டே வளைந்துகொண்டு
சந்துஷ்டியாய் மகிழந்து தணலை ஆவிமிகத் தானிருக்க
கொண்டாடி மாயவனார் ஒரு கோலமதால் கொள்ளைகொண்டு
பண்டாரம் மகிழ்ந்திடவே அந்த பாவையேழுபேரும் கர்ப்பமுற்று
அண்டாமல்தான்நீங்கி இவரோவெனவே எரிக்கஉன்னினரே
கொண்டாடித்தாக்கிடவே அந்த, கோதையின் கற்பிழந்து
எரிக்கமதியழிந்து அந்த, ஏலங்குழலாரியல்மறந்து
மதிக்கொத்தமாமயிலார் மாமுனியைக்கண்டு மதிஅசந்து
அய்யோநம்பெண்ணரசே நம்மறிவுகுலைந்தோம் ஆயிழையே
இத்தனைநாள்வரைக்கும் நாமிருந்த நெறியும்குலைந்தோமடி
சத்திக்குமீசுரக்கும் நாம்சாற்றும்மொழியேது தங்கையரே
வனத்திலேவந்தயிடத்திலிருந்த மாயம் வருவதறிந்திலமே
புனத்தில்கிளியன்னமும் நம்பேச்சும்கேட்காமல் போகுதடி
என்னவிதிவசமோ நமக்கிட்ட விதிமுறையிப்படியோர்
அன்னமடவாரேயிது யார்செய்த கைமசக்கானதுவோ
என்றே மிகப்புலம்ப முனியேற்றின கர்ப்பமுருத்திரண்டு
அன்றே ஒருமணிக்கர்ப்பம் அவதரித்தங்கேதான்பிறந்து
பிறந்தபொழுது பெருமூச்சுவிட்டார் ஆயிழைமாரெல்லாம்
மறக்கமதிமயங்கியந்த மக்களைப்பாராமல்மாமடவார்
நாணிமிகவயர்த்து காடு நாட்டூடேபோவென்று
கோணிமடவார் கோகோகோவென வோடலுற்றார்
ஓடினார்பெண்களெல்லாம் ஒருநொடியதில்நில்லாமல்
தேடினார்வானத்தினூடே சிவசிவா சிவனேயென்று
கோடியேமடவாரெல்லாம்; கொண்டதோர் நாணத்தாலே
வாடியேபுலம்பிமாதர்வனத்தை நோக்கிப் போகின்றாரே
அய்யா வனத்தில் சுனையாட அங்கேயிருந்து வரும்போது

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi