அருள் நூல் 1891 - 1920 of 2738 அடிகள்
மெய்யோவறீய வழியிலொரு விசனத்தீங்கு கண்டிலமே
பையோடரவு மிகவணிந்தபரமன் பயிலைக்கேகவென்றால்
ஓடுவர் கன்னியர்களெல்லாம் பதறிஓம்நகச்சிவாயவெனவே
நாடுவார் நமக்கிவ்விதம் நன்னுதல்மார் ஏழுபேருமோடினார்.
விருத்தம்
பொர்பவனத்தில குளித்ததும்போச்சு
பென்னார்கயிலை வாழ்ந்ததும் போச்சு
கற்போகுலைந்துபல கோலங்களாச்சு
காட்டில்பயந்திருக்கவே விதியாச்சு
என்னயென்ன பாவத்தைச் செய்தோமோ
கண்ணேயிவ்விதி வந்தறியோமோ
வன்னசிவனார் நம்மைமறந்தார்
மாதுமைத்தாயம் நமைமற்நதாரே
என்றந்த கன்னி யேழுபேரும்
யியல்பாய் வனவாசம் போனார்
சென்றந்த வனவாசம் கண்டவர்மறைந்து
சிவானர் அருள்பெறவே தவசிநன்றாரே
நின்றதவத்தின் நிலைமை கூறிட
நித்தமேயுன்சித்த மருள்செய்வாயn
மக்களையீன்றுவந்த மாமுனியருகில்வைத்து
வெட்கமும்மிகவேயாகி விழிநுதல்வேழுபேரும்
சிக்கெனவாகனத்தில் சென்றவரேழுபேரும்
அம்மையருள்பெறத் தவசி நின்றார்
நின்றார் நெடுகான வனமானதிலே
நித்தம் கற்றோனை சித்தம்வைத்தே
வண்டாடும் பூஞ்சுனையில் மாதேழு
பேருங்குழித்து நித்தம்வருகையிலே
கோலம் வேறாகின தாலிவ்வனத்திலே
சிவனேதஞ்சமென்று மெங்களை ஆளவருவாயே
நடை
வருவாய் வருவாய் நீ மகாபரயீ சுவரனே
வந்தெங்கள் சங்கடம் தீர்த்தாட்கொள்வாயே
விளக்கவுரை :
அருள் நூல் 1891 - 1920 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi