அருள் நூல் 2521 - 2550 of 2738 அடிகள்

அருள் நூல் 2521 - 2550 of 2738 அடிகள்

arul-nool

பேருலகில் சொல்லாமல்; பேர்மாறி நிற்போம்
அம்மாவுந்தனக்கு நாங்கள் அடிமையானதல்லால்
ஆருமெங்கள் தனைவெல்லும் பேர்களில்லை அம்மா
இப்படியே பெருவரங்கள் ஈசரன்று தந்தார்
என்னமாயமோ வறியோம் இப்போவந்த கூத்து
தப்பாமல் வந்தெமக்குத் தற்காக்கவேணும்
சந்தனந்தான் தேர்நின்று தெந்தனங்களோடும்
தெருவோட்டி வைப்பதற்குச் சீர்செய்யவேணும்
தேன்மொழியே பத்திரமா காளியெனத்தொழுதார்

விருத்தம்

கொழுததோர் வீரர்தம்மைத் தோகை மாகாளிபார்த்து
பாழாகும் இந்தசீமைப் பாதகக் கொடுமையாலே
அழியவும்நாள்வந்தாச்சு அண்ணரும் பிறந்துமாச்சு
வழியதேய்தற்கு யானும்வகுத்துரை செய்யவேனென்றாள்
காலமும்கடைநாள் ஆச்சுக்கலியுகம் அழியப்போகு
ஏலவேகொடுத்ததெல்லா மித்துடன் பிறக்கலாச்சு
மாலவன் தவசதாக மாசிறை யிருக்கலாச்சு
ஞாலமேயிதற்கு வேறுநானென்ன செய்வேனென்றாள்

நடை

கட்டுடனே உங்களுக்குக் காரணங்களின்னதென்று
காரியமாய் சொல்லுகின்றேன் கேளீர்
மட்டடங்கா கலிவந்து பிறந்ததன்றுமுதல்
மான வரம்பில்லை யப்பாகண்டீர்
ஈனமுள்ளதேவருக்கும் ஈசர்பிறமாதனக்கும்
ஏற்கநடப்பொன்றில்லை கண்டீர்
மானமுறை நீதியில்லை வழக்குசாயலுடனே
வம்புசெய்யும் பேர்கள் தினம் கூட்டம்
ஐயமிறைக்கூலி தெண்டம்
அட்டிஅநியாயம் மெத்த
ஆண்களைத் தீண்டி வேலைகொள்வார்
மானமாகவாழும் எளியோர்கள் சொத்தையெல்லாம்
வாரிவம்பர் சேரக்கைக் கொள்ளை கொள்வார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi