அருள் நூல் 1141 - 1170 of 2738 அடிகள்

அருள் நூல் 1141 - 1170 of 2738 அடிகள்

arul-nool

என்னுடைய ஊழியக்காரர்களே ஒழுங்காய் நடந்திடுங்கோ
கள்ளக்கணக்கெழுதும் பேர்களைத்தான்
முள்ளளியில் போட்டிடுவேன்
முதுகிலடித்திடுவேன் முனிபரனும் சொன்னேன்நான்
நான்சொன்னபடி கேட்காவிட்டால் விடுவேனோ நான்சுவாமி
ஒரு அன்னவூஞ்சல் போட்டிருக்கு அந்தபயல்களுக்கு
கழுகடையம் காட்டுக்குள்ளே காட்டித்தாரேன்சுவாமி
அவன் இட்டதெல்லாம் சட்டமென்று இருக்கிறான்மகனே
அவன், பெட்டகமும் பொன்பணமும்
பறிப்பேனடா நான்சுவாமி
பொல்லாப்பு இல்லையடா புலம்புகிறேன் நான்சுவாமி
வாழையிரண்டு குலையீன்றதுபோல்
வாறேனடா வையகத்தில் என்மகனே
இனிபள்ளிக்கூடம் சோதிக்கபையனையும் கொண்டுவாறேன்
அடே, நாமெழுதும் கணக்குகளை நடுத்தீர்த்துநாமெழுதி
ஆண்டிமகன் ஆண்டியடா ஆருக்கும் அஞ்சுவனோ
பாண்டிமகன் பாண்டியடா பண்டாரக் கிழவனல்லோ
இனி, கொடுத்தவரம் பறிப்பேனடா
குடல்தோன்றி நான்சுவாமி
உம்பளமம் சம்பளமும் ஒருகாசும் நமக்குவேண்டாம்
உத்தரவுபெற்றபடி யுள்ளதெல்லாம் போதுமடா
கைலாசவரம்பெறவே காத்திருக்கிறேன் சுவாமி
பூலோக ஆசாபாசப் பங்குவேண்டாமமகனே
அண்டரண்ம் படைத்தசுவாமி அரிவிரி படிக்கிறாரே
ஒன்றிரண்டும் தெரியாது நீ சொல்லித்தர மாட்டாயோ?
அவரவர்க்கு உள்ளதுண்டு அநியாயம் செய்யாதே
என்னுடைய பத்திரங்கள் என்னுடைய பள்ளியெல்லாம்
கொடுத்துவரச் சொன்னார் குருபரமாமுனியும்
என்கணகக்ன் பேரறிவான் ஊரறிவான் தலமறிவான்
பரமண்டலம் வூமண்டலம் பகுத்தெழுதிவாமகனே

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi