வாசகங்கள்

அகிலத்திரட்டு வாசகங்கள்

இன்றுமுதல் எல்லோரும் இகபரா தஞ்சம் என்று
ஒன்றுபோல் எல்லோரும் ஒருபுத்தியாயிருங்கோ.
                                                                                      - அகிலத்திரட்டு

காணிக்கையிடாதுங்கோ  காவடிதூக்காதுங்கோ
மாணிக்கவைகுண்டம்  வல்லாத்தான் கண்டிருங்கோ.
                                                                                         - அகிலத்திரட்டு

ஆசைவையாதிருங்கோ  அவகடஞ்செய்யாதுங்கோ.
                                                                                        - அகிலத்திரட்டு

ஞாயமுறைதப்பி  நன்றி மறவாதுங்கோ
மாயநினைவு மனதில் நினையாதுங்கோ.
                                                                       - அகிலத்திரட்டு

வைகுண்டாஎன்று  மனதில் நினைத்திருங்கோ
கருதியிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ.
                                                                       - அகிலத்திரட்டு

தீபரணைகாணாதுங்கோ திருநாளை பாராதுங்கோ
ஆபரணம் பூணாதுங்கோ அந்நீதம் செய்யாதுங்கோ.
                                                                                     - அகிலத்திரட்டு

நிலையழியாதிருங்கோ நீதியாய் நின்றிருங்கோ.
                                                                                   - அகிலத்திரட்டு

அலையவிடாதிருங்கோ அஞ்சு பஞ்சமதையும்
குலையவிடாதிருங்கோ குருநினைவை உள்ளேற்றும்.
                                                                                           - அகிலத்திரட்டு

பொய்யரோடன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோடன்பு மேவியிரு என்மகனே.
                                                             - அகிலத்திரட்டு

தாழகிடப்பாரை தற்காப்பதே தர்மம்
தர்மம்பெரிது தாங்கியிரு என்மகனே.
                                                       - அகிலத்திரட்டு

அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே
கடக்கக் கருதாதே கற்றோரை கைவிடாதே.
                                                               - அகிலத்திரட்டு

தினமொரு நேரமெந்தன் திருமொழியதனை கேட்டால்
பனிவெள்ளம் போலேபாவம் பறந்திடும் நிசமேசொன்னோம்.
                                                                                                    - அகிலத்திரட்டு

ஆசையது உங்களுக்கு தோசமதாய் இருக்குதப்பா.
                                                                               - அகிலத்திரட்டு

ஒருபுத்தியாகி உள்ளேயெனை கொண்டோர்க்கு
புதுபுத்தியீந்து பூலோகம் ஆளவைப்பேன்.
                                                               - அகிலத்திரட்டு

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar