அருள் நூல் 2371 - 2400 of 2738 அடிகள்

அருள் நூல் 2371 - 2400 of 2738 அடிகள்

arul-nool

கன்னி யீஸ்வரி சரசுவதியே
சிந்தை மகிழ்ந்திருந்த செந்தமிழுக்;கு
தெய்வமடவாரும் காப்பாமே

விருத்தம்

ஆதியாம் கடவுளான அச்சுதன்பச்சைமாலும்
சாதிகள் தமக்குவேண்டிச் சந்தனச் செந்தூர்தன்னில்
வாரிமயில்மனுவாய்த்தோன்றி வளா;கன்னி நகாpல்மாயன்
நீதியைமனதிலெண்ணி நெடியவன் வருகவென்றே

வருகிறபோதே மாயன்மனமது மகிழ்ந்துகொண்டு
கருதியேயீசர் தம்மைக்கட்டுடன் வணங்கிச்செல்வார்
சுருதியாய் நமதுகைக்குள் சீவாயியேவலாக
பருதிபோல் ஐந்துவீரர்படைத்துநீர் அனுப்புமென்றார்

அனுப்புமென்றிந்த மாலுரைகேட்க
ஐயன் மெத்த மனம்மகிழ்ந்து
என்னமாய்ச் செய்து அனுப்பமாலோனே
நீகேட்ட சட்டமாயிக வீரர்கள் யாரென்ன
சன்னபின்னம் போலுள்ள வீரர்கள்
தா;மபுரி நன்மைக்குமாதே
என்னமாயிது நான்செய்வதெப்படி
என்றுயென்மனம் யெண்ணுதே மாலோனே
ஆடுகோழி யிலைப்பட்டை தீபங்கள்
ஆகாதென்றல்லோ ஆகமம் பூரித்தீர்
நாடுமட்டும் அடக்கி உண்டிடும்
நல்லவீரர்கள் சம்மதிப்பார்களோ
கடியசேவகன் கயிலையில் பையனும்
அக்கினியேறி மாயப்பலவேசம்
அத்திவாக்கனும் காத்தவராயனும்
அந்துபேருமே தீர்க்கமுள்ளவர்
தீர்க்கமுள்ளவர்கள் ஐந்துபேர்கள்தான்
தேசத்திலும்பல வேசங்கள்கொண்டவர்
கோலமாம்பல தூலங்கள் கற்றவர்

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi