அருள் நூல் 1111 - 1140 of 2738 அடிகள்
நாமெல்லாபதிகளுக்கும் இருந்துவிளையாடும் சுவாமி
என்பேரைச்சொன்னால் எல்லாரும் அறிந்திடுவார்மகனே
நான்,
உள்ளபடி சொன்னதுண்டால் உலகம்கைக் கொள்ளாது
நான்,
சொன்னதைச் சொல்லாமலவன் சுயமதியாய்ச் சொன்னான்
அவனைச் செவிட்டிலே
தான்போட்டுக் கொடுத்த கணக்கைப்பறிப்பேன்மகனே
கள்ளக்கணக்கர்தான்பெருத்துக் கனமோசமாகிப் போச்சே
நாம் உள்ளபடிகேட்கையிலே அவனுத்தாரம்சொல்வேனோ
பல்லக்கு நான்தருவேன் பதறாதே நீமகனே
இப்படிநான் சொல்லச்சொன்னக்கணக்கருக்கொரு நகவண்டி
போடாயே
நீபோடாவிட்டால்நான்போடுவேனடா மகனே
கைலாசவாசல் திறக்கையிலே காட்டித்தாறேனிந்த அதிசயத்தை
இதைப்
பொய்யென்று சொன்னவரோடே போருக்கு நான் வருவேன்
பல்லாக்குந் தண்டிகையும் பரிமணமும் சந்தனமும்
உள்ளபடி உள்ளதெல்லாம் உங்களுக்கு நான்தருவேன்
வெள்ளானைக் கடலுக்குள்ளே விளையாடக் கண்டேனடா
தென்கடலும் வடகடலும் ஒருவழியாத்தோன்றுமடா
பாரளந்த மாயவர்க்கு பலவிதமும் உபாயமுண்டு
ஓரடியா நாமளந்து ஓடிவந்தேன் மகனே
மாவலியைச் சிறையில் வைத்த மாயனல்லோமகனே
இடையன்சாமி யென்றாலும் உங்களுக்குச் சட்டமுண்டு
முன்னோலை யெழுதுமட்டும் முழித்திருப்பேன் மகனே
ஏட்டுக்கடங்காது எழுத்ததாணிக்குஞ் சேராது
இதைமெய்யென்று சொன்னவரை முத்தியணைபேன்மகனே
உதித்தநாள் கொடியேற்றி இருபத்தினநாள் இறக்கிவிடு
இது, கலியுகத்து ஆசாபாசம் கண்டேனடா மகனே
விளக்கவுரை :
அருள் நூல் 1111 - 1140 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi