அருள் நூல் 1051 - 1080 of 2738 அடிகள்
பூலோகப்பங்கதுதான் பொருத்தமில்லை உங்களுக்கு,
பூலோகப்பங்கதுதான் பகுதியுண்டு என்மகனே
சாற்றரிய தன்விசயன் தங்கிக்கிடங்கு மென்றுசொல்லி
பூத்துஅவர் சொரிந்து பூமியில்வந்தார் என்மகனே!
வேர்த்து அவர்சடைத்துப் பாசுபதம் வாங்கிப்
பகைத்தீர்ப்பேன் என்மகனே!
பள்ளியறை தான்திறந்து பதியேறும் நாளையிலே
உள்ளபடி சொல்லுதற்கு உகந்துவாறே னென்மகனே!
கவிந்திருந்து மாமுனியும் இந்த அதிசயத்தைக்கண்டிருந்து
நிமிர்ந்து அவர் காரணங்கள் செப்புவார் என்மகனே
உள்ளபடி நாமிந்த உபதேசம் சொன்னாலும்
நல்லதென்று சொல்லியவர் நன்மைகொள்ளாரென்மகனே!
உன்னருள்தானென்றுசொல்லி உந்திடாதேமகனே!
உனக்கேச்சும் பேச்சுமல்லாத யிணக்கமில்லை என்மகனே!
மாய்ச்சல்வாரும் தானுனக்கு மகிழ்ந்திருப்பாய் நீமகனே!
காய்ச்சல்வந்தால் உன்னைக்காணாது கற்பித்தேன் நான்மகனே
பயந்திருந்தநீ பணிவிடைகள் செய்வாயானால்,
உயர்ந்த குடிவாய் உயிர்பிழைப்பாய் நீமகனே!
இதைப்
பகர்த்தெழுதிவந்து பள்ளிகூடங்கள் தோறுங்கொடுத்து
அதில் குறைவுவந்தாலும் தெளிந்துவா என்மகனே.
நாமெழுதச் சொன்ன கணக்கரோடேதும் பறையாதே
தர்மம் பெருகுமடா தான்தளிர்ப்பாய் நீமகனே!
இறைபகுதிதான்குறைந்து இருந்தாள்வோம் நாம்மகனே!
துவரயம்பதியதுதான் துலங்குவரும் நாளையிலே
இலங்குமடா என்பதிதான் எழுதினேன் என்மகனே!
நாதாக்கள்கூட்டம்நாட்டில் நடுநடுங்கும்
போருக்கு வந்தவனை போகவிடேன் நான்மகனே!
ஒழுங்காய் நடந்துவர உத்தரவு தந்தேனடா.
பூமணப்பதிதனிலே,
விளக்கவுரை :
அருள் நூல் 1051 - 1080 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi