அருள் நூல் 1921 - 1950 of 2738 அடிகள்

அருள் நூல் 1921 - 1950 of 2738 அடிகள்

arul-nool

செவ்வாய்க்கருமேனி சிறீபத்ம னாபதிலே
சென்றேகடலில் துயன்ற பாரளந்த்
சிறீபாதமே துணையாம்
ஐயவர்க்குதவுவோனே ஆதிநாராயணனே
இந்தவரத்தைதந்தருள் செய்யவேண்டும் பச்சைமாலே
தென்கடலில்துயின்ற பாரளந்த சிறீபதமே துணையாம்
ஆடரவில்துயிலும் சிவஐங்கரா சங்கரனெ
ஆலிலையில்துயிலும்நாதனே ஆபத்துக்காத்தருள்வாய்
மனதிலறியாமல் நாங்கள் மாது ஏழுபேரும்
வந்திடும்தீவினை அகற்றிடவே அருள்மாதுமைபாகனே
இனிதுயர் தீர்த்தேழுபேர்களும் யீன்றவைத்த
மதலையைத்தந்திந்த ராச்சியமும் ஆளவரம் தாருமய்யனே
பண்டூசல்செய்த முனியவர்பாரியாய் எங்களையும்
பண்பாகக்கலியாணயின்ப முடன்செய்து
பாராளுதற்குவந்தருள் செய்யவேணும்
சிசிமாது மணவைநகர்ப்பதியில் வாழ்பவரே
மேட்டுலாடமதில் மெல்லியர் கண்டாட்டி மேலுடலெல்லாம்
பொருமித்துநயனத்துவில்விளைத்ததில் ஐந்துபூவைபக்கட்டி
நாற்பத்தொன்றுபத்து ஆவிமடக்கி சயனமதில்மேவளர்த்ததபாக
நாடித்தங்கள்தங்கள் வாக்கிலொரு சீர்நாட்டிதிலோர்
விரலைநாட்டி மனம்நாட்டி நாக்குச்சுழிதாக்கி
நுனிமூக்கில் விழிநோக்கி நல்லறிவைக்கொண்டு கல்லறிவைப்
போக்கிவாக்கி சித்தியாயநோக்கி மடவார்வாசமெல்லாம்
அடைத்தொரு வாசல்நோக்கிப் பஞ்சணையில் வஞ்சியைமிஞ்சவே
இருத்திப்பார்க்கும் லாடமதில் நோக்கிநின்றார் ஏழுபேரும்
இந்த நிகட்டையாக பன்னிரண்டுவருடம் காலிழகாவண்ணம்
தவசிநின்றார் நின்றுதவசில் மண்டலரைக்கண்டு தேவரெல்லாம்
நெட்டூரமித்தவன்தான் கட்டுட் டென்பார்
மண்டலத்தில் யித்தவம்போல் கண்டறியோம் கேட்டறியோம்
விண்டறியக்கூடாத வெற்றி! வெற்றி! வெற்றி! மேலோர்மெச்சினார்

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi