அருள் நூல் 1021 - 1050 of 2738 அடிகள்

அருள் நூல் 1021 - 1050 of 2738 அடிகள்


arul-nool

முட்டப்பதி தீர்த்தம் முழுத்தீர்த்தம், ஆகவில்லை
கிட்டவரும் நாளையிலே கிட்டும் அதிகபதி யென்மகனே!
வட்ட வட்ட சாலையிலே வழுகாமல் நீயிருக்க
நாம், இட்டபடி சட்டமெல்லாம் கூடிவரும் என்மகனே!
நாம் எழுந்தருளும் வேளையிலே அங்கங்கே உள்ளசனம்
எல்லோருந்தான்வருவார் என்மக்களே நீங்களுந்தான்.
அத்திபுரந்தனிலே ஐபேருந் தானிருந்தார்.
புத்தியுள்ள குருநாட்டில் பிறந்து வந்தேன் யென்மகனே!
பட்சிமிருகங்களும் பலஜீவ சந்துக்களும்,
பாதத்தில் வந்துவிழுந்து பணிவிடை செய் யும்மகனே!
தர்மம் பெரிதப்பா தான்சொன்னேன் என்மகனே!
தண்ணீர் பந்தல்வைத்துத் தலங்கள்சுற்றி சேவித்துவந்த,
மக்களுக்குப் பசியாற்றி விட்டுவிடு என்மகனே!
உகந்தகுடியென்று உன்னிடத்தில் சொன்னேன்நான்.
பயந்துதர்ம மிட்டந்த பரம்பொருளை தேடிடுங்கோ!
கொடுத்தது கூடாது கூடும்படி நீகொடுத்து,
அதிலிருந்து தசையாறி குளிர்ச்சியுள்ள ஓரிடந்தான்,
தழைப்பீர்கள் நீங்கமக்கள் தான்சொன்னேன் என்மகனே!
முன்முகப்பில் நிற்பாயென்று நான்பார்த்தேன் என்மகனே!
பின்முகப்பிலாக்வி விட்டான் பிற்கிளையை நான்பார்ப்பேன்.
பக்திமறவாமல் பதறாமல் நீயிருந்தால்,
புத்தி சொல்ல நான் வருவேன் புலம்புவேன் என்மகனே!
கர்த்தாவை நோக்கிக் கடுந்தவங்கள் நாம் செய்தால்
புத்திவரும் திருப்திவரும் புலம்புவேன் என்மகனே.
சீசன்மார் கண்டு சிரித்து மகிழ்ந்திருந்து
போதமில்லையென்று பேசிடுநீ என்மகனே!
ஆடரவில்பள்ளிகொள்ளும் மாலவனும் தேவியுமாய்,
பேதகமில்லையென்று பொறுமை சொன்னா ரென்மகனே!
சங்கத்தார் எல்லோரும் திருச்சபைக் கூட்டத்திலே,
என்பங்கைத்தாவென்று பகர்ந்துவா நீமகனே!

விளக்கவுரை :



அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi