அருள் நூல் 2191 - 2220 of 2738 அடிகள்

அருள் நூல் 2191 - 2220 of 2738 அடிகள்

arul-nool

கழுத்திலே கல்லேற்றிக் கைதாப்பாள் போடுகிறானே
பழிக்கோ நாங்கள் பெற்றபிள்ளை படும்பாடுகேட்கலையோ
கம்புவெட்டி அடிக்கிறானே கல்லேற்றி அடிக்கிறானே
அரியரசன் தவசுபண்ணி தெய்வகன்னி பெற்றமக்கள்
பொறுத்திருங் கோமக்காள் பூலோகம் ஆள்வீர்களே
குடுக்கவட்டைச் சிரட்டைகொண்டு வந்துயிருந்தேனடா
சூதாடிப்படைபொருது திறம்பார்க்க வரவில்லையப்பா
அரியரசன் தவசுபண்ணி அவர்பெற்ற பிள்ளையுண்டு
பொன்னரசி ராச்சியத்தில் அரசாளப் பிள்ளையுண்டு
மன்மதன்சீமையிலே வாள்வீச்சுக் காரருண்டு
கூலிக்காரர் மக்களில்லை கோடிவரிசை பெற்றமக்கள்
வற்றிய குளத்துக்குள்ளே முத்துக்
கெண்டைப் பிடிக்க பிள்ளையில்லை
அம்மா அம்மா தாய்க்கிழவி அதிமுள்ள பிள்ளையுண்டு
நாட்டுச்சீமையிலே வகையெடுக்கப் பிள்ளையில்லை
என்னுடைய தம்பிமாரே இலங்காபுரி ஆள்வாயோ
ஊசிமுனையதிலே உங்களுக்காய்த் தவமிருந்தேன்
காசியிலே ராசர்மகன் வாழும்தேசம் தாறேன்நான்
நட்டமா நான்இட்டவேலி நாள்தோறும் வாழ்ந்திருக்கும்
பால்வருணன் என்மகன்தான் பஞ்சவரும் என்மகன்தான்
நான்பெற்ற என்மகன்தான் ராச்சியத்தை ஆள்வானே
வாசமுடையபெருஞ்சுனையில் தெய்வஉயிர்மீன்பிடிக்கவந்தேன்
ஊற்றால்தான் போட்டதுண்டால் உயிர்த்தேர்ந்து மீன்பிடிப்பேன்
பழிபாவம் செய்திடுவேன் பார்த்திருங்கோ கொஞ்சநேரத்திலே
செடிகலைத்துவேட்டையாடி தெளிந்தமுயல்பிடிக்கவந்தேன்
அதிகமுள்ள வெடிகள்கொண்டு அமைத்துவைத்து கட்டிடுவேன்
இளங்கொடிகால் வைத்து எடுத்துக்காட்டவந்தேனப்பா
என்னுடைய பிள்ளைகளே இரக்கமுண்டு பத்தனமாரே
கடுவாய்ப்புலிகள்சிங்கம் கடக்கநின்று சிரிக்குதப்பா
ஒளித்திருந்தேன் வெகுநாளாய் ஓடிவந்தேன் எடுப்பதற்கு

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi