அருள் நூல் 391 - 420 of 2738 அடிகள்
வடிவுகொள்வதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
மாயன் திருப்பதிக்குள் யிருந்து புக்கு
எங்கள் அய்யா வைகுண்டராசர் யெழுந்தருளி
தெருச்சுற்றி தேசத்தில் பவனிவருவது
யெங்கள் அய்யா சிவசிவா அரகரா அரகரா
கொந்தளத்துடன் வந்து எங்கள் அய்யா
கூண்டபெரும் படையுடனே
கூடவரும் காளாஞ்சியோடே கோட்டைசுற்றி
விளையாடி வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
இருபத்தி நாலிலொன்று ஏற்பதும் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து ஈரேழு உலகமெல்லாம்
ஒருகுடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ராசனுட
கோட்டையெல்லாம் எங்கள் அய்யா அழித்து
வைகுண்டராசர் வந்து தர்மபதியுதித்து
தர்மயுகம் அரசாள வருவது எங்கள அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
வாடாத பூவதுவாம் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்துதிருப்பதிக்குள் புகுவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முடிசூடும் பெருமாளாக எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மறுமன்னர் யெதிரில்லாமல்
அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சரணம்சரணமென்று தாழ்ந்துநடந்த அன்பருக்கு
வைகுண்டபதிதனிலே வைகுண்ட ராசராக
அரசாள வருவது எங்கள் அய்யா
விளக்கவுரை :
அருள் நூல் 391 - 420 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi