அருள் நூல் 1741 - 1770 of 2738 அடிகள்

அருள் நூல் 1741 - 1770 of 2738 அடிகள்

arul-nool

குடியிருந்துகொலைகள் செய்வேன்பின்
கொலைக்கழுவில் போட்டிடுவேன்
கண்டதுண்டமாய் அழியுதப்பா கைலாசம்புரண்டுபோச்சே
பரமனென்னைக்கண்டதுண்டு தனித்து நானிங்குவந்தேன்
பரிசித்துராஜன் கண்டதுண்டு பயந்திடுங்கே ஓடிவந்தேன்
மார்க்கண்டேன் வந்ததுண்டு மறைந்திங்கே வந்ததுண்டு
வையகத்தில் எமனும் மாயனும் கண்டதுண்டு
ஈசனுடனேவார்த்தை சொல்லாதே நீபடுகுழியில் விழாதே
ஆண்டிபேர் சொன்னதுண்டால் ஆசாரஞ் செய்திடுங்கோ
கொட்டிமுழக்கிடுவேன் குடிகரை யேறுமட்டும்
பொய்க்காற்று அடிக்குதப்பா பெருவெள்ளமதாய்க்போகுதடா
கொம்புசத்தம்கேட்குதப்பா வம்புகலி யழியுதடா
இன்னும்செப்படிவித்தையொன்று செய்கின்றேன் கேள்மகனே
வையகத்தில் ஒருசாரம்
வகைவகையாய் நாடாள்வார் தேசமெங்கும்
நம்முடைய சித்துவித்தை காணக்கான மூன்றானேன்
மாயவன்பொல்லாதான் குடிகொண்டால் உள்ளறிவான்
மாசியென்றும் வாசியென்றும் மாமுனிப்பற்று சொல்லுகின்றேன்
ஒன்றுக்கொன்று பகையாச்சே உங்களுண்மைபகையானால்
விள்ளுரென்றும் ஒருவனுண்டு பலவேடிக்கைக்காறனடா
நாட்டுமுடியிறக்கி வைகுண்டராசர் ஆளவருகிறார்
நம்பிப் பிடித்திடுங்கோ அய்யா சிவசிவா அரகரா

சிவகாண்ட அதிகாரப்பத்திரம் முற்றிற்று

சத்த கன்னிமார் பாடல்

விருத்தம்


முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே
மூவரிய தெய்வகன்னி யேழுபேரும்
தன்னரிய நாரணரை தேடித்தேடி
தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்த
தென்னிலங்கை மணவைநகர் பதியிதான்
சீமைபதி தெட்சணத்தில் சென்றுகண்டு
மன்னவனும் தேவியுமாய் மகிழந்தஞாயம்
வளமையுடன் கதையாக வகுக்கலுற்றார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi