அருள் நூல் 421 - 450 of 2738 அடிகள்

அருள் நூல் 421 - 450 of 2738 அடிகள்

arul-nool

சிவசிவ சிவசிவா அரகர அரகரா
முடுக்கண் தலையறுத்த மேகவர்ணப் பட்டும்சூடி
வைகுண்டப் பதிதனிலே வைகுண்டராசராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
தீத்தறுத்த மாயவனார் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து நடுத்தீர்த்து
அரசாள்வதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
மாயன்திருப் பதிதனிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மேகம் சூழ்ந்த
வையகமெல்லாம் ஒருகுடைக்குள்
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
படிஉடன் நடைதனிலே பாரப் பதிதனிலே
வைகுண்ட பதிதனிலே வைகுண்டராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
நாலுயுகம் கொண்டு எங்கள் அய்யா
வைகுண்டராசருக்கு நாற்சொரூபம் கொண்டு
தர்மபதியுதித்து அரசாள வருவது
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
குணமான ரிஷிமார் வந்து பணிவிடை செய்து
வைகுண்டராசராக ஏற்பது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சாதிக்கு சிறையிருப்பது எங்கள் அய்யா
தங்கத் திருமுடி சூடுவது எங்கள் அய்யா
அட்டி சரப்பளி அணிவது எங்கள்அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
சத்திமுனி  என்தகப்பன் சத்திகன்னி என்தாயார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi