அருள் நூல் 1771 - 1800 of 2738 அடிகள்

அருள் நூல் 1771 - 1800 of 2738 அடிகள்

arul-nool

வகுப்பதற்கு இன்னதென்றறியேன் நானும்
வகைவிபரம் நீரருளி வரமேதந்து
தொகுப்பதற்குச் சிலம்பிமுவே துணையாமென்று
இடமதிற்கில்  லாமலீடேறத் தீர்த்து
எப்போதும் எனையாளும் எம்பிரானே
யுகபதியில் மேவியுதித்தெழுந்த நாதா
உன்உவமை சொல்லுதற்கு உதவிகாப்போம்.

நடை

காப்போம் சிவபர ஆதிநாராயண கண்மணியானவரை
கன்னிமார்பாடலுக்கு முன்னைவினைத்திடகல்விக்குதவுவாயே
சேர்ப்பாயுந்தன் அருள்சிந்தையில்வைத்திருந்த தெய்வமடவார்
திருக்கறைத்கூறச் செயல்குருநீயல்லாமல் சீமையிலாருளாரோ
முக்கிபெறும் தெய்வமாதர் ஏழுபேரும் முன்னாக்கு காலமெல்லாம்
முண்டவனத்தில் கூண்டுதவம்செய்து முற்றும்நிறை வேற்றி
பக்தியுடன் நற்சொல்ல வைத்துப்படிமுறை தப்பாமல்
பாரானதெட்சணமீதானதில் வந்துபண்பாக கண்டுமையும்
வாதாடியவர்பெற்ற மக்களைக்கேட்டுன்னைவருடியே நாள்தோறும்
சீரானமக்களை யீந்துபின்னேழ்வரைச் சேர்த்துமணமருளி
தேவியும்மக்களும் மன்னவராகி நீர்சீமைதனை ஆண்டுதவும்
பண்பான இந்த கதைபடிப்பேனென்ற பாவவினை யானதெல்லாம்
பறக்கும்கருடனைக் கண்டொரு உள்ளான் பறந்து போலோக்கும்
குயில்நின்று கூவிட மந்திகுரங்குகள் கூப்பிட்டதொக்கும் மன்றோ
கூறும் செந்தமிழ்பாவணர் முன்னே குழந்தை உரைத்தேனப்பா
குற்றமதி லொன்றும்வராமல் காத்திடக்கர்த்தனருள்வேணும்
கூடும்பரவெளி ஆனந்திமார்தேவி கூடியருள் புரிவாய்
சித்தமிரங்கியே தேவிமனோன்மணி சிந்தையிலேருந்தும்
சொல்லும் கதைகனக்கல்லல் வராமலே தோகையருள் புரிவாய்
ஆண்டவளாம்அரி நாராயணருடன் உலகில்மிகவாழும்
ஆதிபராசக்திதேவி ஏழுபேரும் அன்பாயிதற்குதவும்
கூண்டபுகழ்பெற்ற சான்றோரையீன்றகோதை ஏழுபேரின்
கோலத்திருலியாணத்திருக்கதைகூற என்குரு நாதனிது காப்பதாமே.

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi