அருள் நூல் 2611 - 2640 of 2738 அடிகள்

அருள் நூல் 2611 - 2640 of 2738 அடிகள்

arul-nool

தம்பிபகை அன்னயர்க்குப் பிள்ளைபகைகன்னி
பெண்களும்பகையாம் பண்ணிரியாமி
மருமகளுக்கு மாற்றானாய் மாறாமல்பூமிதனில்
மாமிதன்மேல் போர்ப்பகையாம் கூராண்மைஅறிவு
மயக்கமாய் அண்ணனுடன் தங்கமுறைமை
தம்பிச்சொல்லுவார் முழுதுமேதரைதனிலே
தாயுமானும் சரசமிகப்பெருகி ஞாயவழிப்பாராமல்
நத்தியேநேசமுடன் சிற்றின்பம் செய்திடுவார்
சீமையெல்லாம் மயங்கி அத்தனையும் தேடார்கள்
அம்புவியெல்லாம் நித்தநித்தம் பெண்கள்
மோகம் பெருகிக்கண்ட கணவன்மேல்
பாவமெனத்தோன்றாமல் பாருலகமெல்லாம்
அதிகக்கோபமுடன் பொய்யாற்கொலைகள்
செய்வார் பாவமதாய் முன்னாலே பெண்ரூபம்
முக்கோணமாய்ப் பிறக்கும் பின்னாலே ஆண்போல
புpறந்துவிடும் முன்னாலே ஆண்பிள்ளைபெண்பிள்ளைகள்போல
அரையின்கீழ் பிறக்கும் ஆண்பிள்ளைமீசை பெண்ணுக்கு
ஆகிவிடும் மட்டிகளாய் நாணுவார் நஞ்சுதின்பார்
நாக்கைப்பிடுங்கிடவார் சீனமுடன்சாவார் கிணற்றிலே
நாணமுடன் ஆற்றிலேமடிவாரும் அக்கினியில் மாள்வாரும்
தாழ்மையாய் குத்திமிகச் சாவாரும் முகடராய் நாட்டமுடன்
பூலோகமெல்லாம் பிழையான துன்பத்தால் மாலோகச்
சக்கரத்தால்மடிவார்கள் பூவோகம்விசிறும்
பனியாலும் வீசக்காற்றாலும் வெயிலினாலும்
சீறுமிருகமதால் செத்திடுவாய், வீறுகெட்டு
நாளுக்குநாளாய் நடக்கவழிகுறுகும், சேவிக்குமே
வானம்திசைமாறும் கூலிக்கும்பார்க்கும் பாழ்நரகில்
ஏறுஅக்கினியால் நாள்தோறும் பூமிநடுக்கமுண்டாம்
வாழ்வோருக்கும் மேல்புறத்து நஞ்சைவிளையும்
அதற்குக் கீழ்புறத்து நஞ்சைவிளையாது

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi