அய்யாவழி வழிபாட்டு புத்தகம்
அய்யாவழி உதயமாகி 174 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய - சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய - சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.
அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி விட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவொடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னை தான நிலைபடுத்திக்கொண்டது.
பதிகளும் நிழல் தாங்ல்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 2016 - ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 10000 - க்கும் நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன.
அய்யாவழி வழிபாட்டு புத்தகம் என்னும் இந்த நூல் எல்லா பதிகளிலும், நிழல் தாங்ல்களிலும் மற்றும் வீடுகளிலும் அய்யா வைகுண்டரை வழிபடுவதற்கு உதவியாக இருக்கும் வகையில் இலவசமாக வெளியிடப்படுகிறது.
இந்தப் புத்தகம் தேவைப்படும் அய்யாவழி அன்பர்கள் பின்வரும் முகவரியில் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
நாகலிங்கம்.
அய்யா உண்டு!!!
முகவரி:
பொதிகை பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்,
எண். 300, மத்தியாஸ் காம்ளக்ஸ்,
செட்டிக்குளம் ஜங்ஷன், நாகர் கோவில் – 629002.
தமிழ்நாடு, இந்தியா.
மின்னஞ்சல்:
pothigaipublishers@gmail.com,
http://www.pothigaipublishers.com