பஞ்சப் பதிகள்

பஞ்சப் பதிகள்

பஞ்சப்பதிகள் என்பது தென்னிந்திய சமயமான அய்யாவழியின் புனித தலங்களாகும். இவை ஐந்து ஆகும்.

1.    சுவாமிதோப்பு பதி
2.    அம்பலப்பதி
3.    முட்டப்பதி
4.    பூப்பதி
5.    தாமரைகுளம் பதி

மேலும் அவதாரப்பதியும் வாகைப்பதியும் இரண்டாம் நிலை புனித தலங்களாக கருதப்படுகிறது.

1.    சுவாமிதோப்பு பதி


சுவாமிதோப்பு பதி அய்யாவழி சமயத்தின் தலைமையகமாகும். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிகவும் முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலத்தில் ஆகும்.

சுவாமி தோப்பு தலைமைபதியில் ஆண்டுக்கு மூன்று திருவிழா நடைபெறும். ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும். தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருநாள் நடைபெறும். வைகாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும். மாசி 20 அய்யாவின் திரு அவதாரம். நித்தம் நித்தம் திருநாள் காணும் ஒரே பதி சுவாமிதோப்பு தலைமைபதி.

2.    அம்பலப்பதி

அம்பலப்பதியில் ஐப்பசிமாதம் முதல் வெள்ளிகிழமை கொடியேறி 11நாள் திருவிழா நடைபெறும். 96 தத்துவங்களை கொடைபதி அம்பலபதி திரு ஏடுவாசிப்பு பங்குனிமாதம் 3வது வெள்ளி துவங்கி சித்திரை மாதம் முதல் ஞாயிறு பட்டாவிஷேகம் நடைபெறும்.

3.    முட்டப்பதி

அய்யாவின் 5 பதிகளில் ஒன்று முட்டப்பதி. முட்டப்பதியில் பங்குனி மாதம் இரண்டாவது வெள்ளிகிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் வாகன பவனியும் தர்மங்களும் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

முட்டபத்தியில் திருவிழா முடிந்தது சுவாமிதோப்பில் இருந்து முத்துகுடை ஊர்வலம் முட்டப்பதிக்கு வருகிறார்கள். முட்டப்பதி கடலுகருள் அய்யா இரண்டு முறை விஞ்ஞை பெற்றார்  என்பது முட்டப்பதியின் சிறப்பாகும்.

4.    பூப்பதி

பூப்பதியின் சிறப்பு, பூமடநாத அம்மையை மனம்புரிந்தால் பூப்பதி என பெயர்பெற்றது கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருஏடு வாசிப்பு நடைபெறும்.

5.    தாமரையூர் பதி


“நாராயணரும் நல்லதிருச் செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண்டங்கிருந்து
ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரையூர் நல்பதியில்
மூன்றான சோதி உறைந்திருந்த தெச்சணத்தில்
வந்திருந்த நல்பதியின் வளமை கேளம்மானை”
                                                                                            – அகிலம்

சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேறி 11 நாள் திருவிழா நடைபெறும்.

திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை. 7 நாளும் சுவாமி தோப்பு பதியில் பாட்டாபிஷேகம் நிறைவேறியபின் 7 நாளும் திருஏடு வாசிப்பு நடைபெறும்.

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar