அருள் நூல் 691 - 720 of 2738 அடிகள்

அருள் நூல் 691 - 720 of 2738 அடிகள்

arul-nool

பூமி அழிந்திடுமே சிவனே அய்யா
கொல்லவே என்றனையும் கூட்டியே கொண்டுபோனா
கோலங்கள் பண்ணுதற்கோ சிவனே அய்யா
கூட்டியே கையைச்சேர்த்து கட்டிய கயிற்றைநான்
கொலுசென்று நினைத்தே னையோ சிவனே அய்யா
பகைவன் அடித்துவந்த அடியும் தங்கச்
சரப்பளியென்று எண்ணினேன் சிவனே அய்யா
கந்தனென்றியாமல் எந்தனைத் தொட்டடித்த
கையும் தானோகலையோ சிவனே அய்யா
வெள்ளத்தடியைக் கொண்டு கள்ளனைத்போலத்தள்ளி
விட்டென்ன அடித்தானே சிவனே அய்யா
எனை அவன் வைததெல்லாம் வாக்குவாம் தானென்று
நினைத்துக்கொண்டனையா சிவனே அய்யா
பச்சைநாவியைப் போட்டு பாலென்றுகொண்டுதரப்
பாலாயிருந்ததையோ சிவனே அய்யா
கொடும்பாவி யென்னையும் புழுகணி அறையிலே
கொண்டுபோய் அடைத்தானே சிவனே அய்யா
அடைத்த அரங்கதனை அலங்காரத் தேர்ந்தட்டேன்
றகத்தில் நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
இட்டமாய்ப் பொட்டகத்தில் ஒட்டகையை நிறுத்தி
என்னையும் அடைத்தானே சிவனே அய்யா
வதைசெய்ய விட்டபுலி அதிசயப்பட்டு என்னை
நீற்றுக்கல் கொண்டுவந்த நீற்றிப்போட வேணுமென
நீசனும் செய்தானே சிவனே அய்யா
இந்த நினைப்புக்குப் பூச்சொரிகிறாதென்று
எண்ணி நினைத்துக்கொண்டேன் சிவனே அய்யா
நெய்யுயூறிக்கட்டையெடுக்கித் தீயைவைத்துநீந்திக்கோ
என்றானோ சிவனே அய்யா
குளியாத மேனியில் குளிக்கநாள் ஆச்சுதென்று
குழிபோட்டு நின்றதையோ சிவனே அய்யா

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi