அருள் நூல் 1951 - 1980 of 2738 அடிகள்

அருள் நூல் 1951 - 1980 of 2738 அடிகள்

arul-nool

அப்படியிருக்க ஆனகயிலைதன்னில்
அம்மையுமையும் தானேறிந்து தானேது சொல்வாள்
செப்பமுடி யாததவம் தேவியேழு பேரும்
நற்புடைய யீசுரரைச் சென்று தொழுதேற்றி
நல்லகன்னி மார்புதுமை நவிலலுற்றார் மாது
கேட்டறிந்த யீசுரரும் கெட்டி கெட்டி யென்ன
கேட்டாயோ வுனதண்ணர் நாட்ட மிதுவென்றார்
வட்டமிலாப் பூஞ்சுனையில் வந்தவரைத் தொட்டு
மாயஞ்செய்ய யேதுவினால் வந்;தஞாயம் பெண்ணே
நாட்டமுட னிந்தகதை பார்க்கப் போகவென்றால்
நாரணர் வாராமல் நாம்போவ தேதோ
கேட்டந்த யீசொரியும் கெட்டிகெட்டியென்று
கெருடாழ்வா ரைநினைக்கக உடனே யவர்வந்தார்
உற்றாயுங்கள் அண்ணருடைய ஊர்வளமை யெல்லாம்
உரைத்துவிடு வென்றாரே உலகளந்த மாதை
சித்திரம்போல் பஞ்சவர்க்குச் செய்த உபகாரம்
சிலகாலம் அங்கிருந்து சென்றார் வனத்தூடே
வீரமுள்ள தெய்வகன்னி மாரைவன மீதில்
வித்தியாதர முனிபோலே வேசமொன் யெடுத்து
கூதலையும் கொந்தலையும் கோதையர்க் கேவி
கூத்தாடி மாயவனார் கொழுந்துதீப்போ லானார்
அக்கினி வேசம்  கொண்டு அவர்கிடக்கும் மாயம்
ஆரமணி கன்னியர்கள் கூதல்பொறுக்காமல்
முக்கியமாய் அக்கினியை மோந்துவளைந் தனரே
முன்மோகம் மிகத்திரண்டு மூன்று நாலுப்பிள்ளை
பெற்றுவிட்டுக் கன்னியர்கள் மூச்சுவிட்டு வோடி
மீளும்சுனை தானிழந்து பெண்களேழு பேரும்
அத்துவனக் கானகத்தில் அருந்தவசு நின்றார்
அண்ணரொரு பிள்ளைதனை ஆவியுமே யெடுத்து
நாணாமல் பிள்ளைக்கு நாமம் சாணானென்று

விளக்கவுரை :


அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi