அருள் நூல் 1831 - 1860 of 2738 அடிகள்
ஈசன்யெலென்று மரத்திலந்ததேவிமார் ஏறவேணுமென்றே
மிகத்துணிந்து நல்லஏழினுள்கன்னி இளையவளும்
கூறிதுயிலெடுக்கும்வேளை கோலதிருமால் ஒரு கோலம் கொண்டார்
கொண்டதோர் கோலம்தன்னை அந்தகோதை ஏழுபேரும் கண்டிருந்து
இன்றே கைவாச்சுதன்று யெரிக்கதுணிந்ததாரே நாரணரை
தீப்போல்மிகமிகவாவி அந்த சொந்த சுனைக்கரையானதிலே
வெயில்போல் கொழுந்துவிட்முமுனி நல்லகனலாகிகிடந்தார்
கண்டந்தகன்னியரும் கனலாய்எரிந்துவிடோமென்று சொல்லி
கொண்டாடிக்கன்னியர்கள் பின்னும் குக்களித்துச் சுனையாடவென்று
துகிலைக்கரையில் வைத்தஅந்த தோகைச்சுனையில் குளித்திடவே
வெயிலான மாயவருமொரு உபாயம்நினைத்தார் உலகளந்தார்
இனியிந்தகன்னிகட்குமெத்தவெவிறையலை தான்கொடுத்து
தணியாத அக்கினியைவந்துதழுவிட கற்பையழிக்கவென்று
நினைத்தே வருணனையும் நெடுவாயுவை அங்கேவரைவழைத்து
நினைந்தே விறையல்கொண்டு நண்ணுதல்மாரேழுபேரையிப்போ
மசக்கி கொடுவாவென்றொரு மாயமதுக்கு விடைகொடுத்தார்
திசக்கியமாயமது அந்ததேவி ஏழுபேர்க்கும் சென்றதுவே
அப்போதங்கே அருணன் ஆகாசமீதிலே நின்றுகொண்டு
பொற்பொறி நரல்போல் வந்த பெண்களின்மேலே தூவினனே
தப்பாமால்வாயுவும் வளர்சரீரம் விறைக்கவே வீசனனே
மெய்யானகன்னியர்கன் மெத்தவிறையலாலுளும் நடுங்கி
ஒடுங்கி மிகக்கொடுகி யந்த உள்ளம் தடுமாறும் பெண்களெல்லாம்
இந்த விறையலுக்கு நாம்ஏது செய்யப்போகிறோம் பெண்ணரசே
சிந்தையருதடி உடல்சிலிர்க்கு முகமெல்லாம் வாடுதடி
ஆராருசெய்தததுவோ பெண்ணே ஆட்டம் பொறுக்கமுடியுதில்லை
கூரல்மிகக்காய ஒரு கொந்தணல் தன்னிலும் காணோமே
காணாமே பெண்ணரசேநம் கர்மவிதியது தங்கையரே
வாணாளயருதடி யென்று மாதுகன்னிமார் ஏழுபேரும்
பார்க்கின்றவப்பொழுது அந்தபாரான ஆவிக்கரையருகில்
தாக்கின்ற அக்கனியும் தணல்போலே குமறி யெரிந்திடவே
விளக்கவுரை :
அருள் நூல் 1831 - 1860 of 2738 அடிகள்
அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi