அருள் நூல் 2311 - 2340 of 2738 அடிகள்

அருள் நூல் 2311 - 2340 of 2738 அடிகள்

arul-nool

நன்மையாய்த்தென்னாளும் நமதுசொற்படி போல்வாழ
தின்மைகள் பலதும்செய்யும் திருடரைக் கருவாய் செய்ய
செம்மையாய் நமக்குள்ளைந்து சீவாயி வேண்டுமென்றார்

என்றவர்நினைத்தபோது ஈஸ்வரனார் மகிழ்ந்துமுன்னாள்
தண்டமிழ்ப் பதத்தாலிந்த தாட்டிக வீரரான
மன்றமிழ் சுடலைநாதன் மாநிலம் காத்தவீரன்
என்றிவர்முதலாய் ஐந்துவீரர்கள்இசைவால்வந்தார்

வந்திடும் பேரைக்கண்டு மாயவர் மனதுள்மெச்சி
புந்தியில் மகிழ்ச்சி கூர்ந்து புதுவரம் அவர்க்க ஈந்து
மந்திரித்தலைவா யெந்தன் மக்களே பாpசையேந்தும்
தந்திரத் தோழன்மாரே சாற்றுவழி கேளென்றார்

மொழியிது வென்று நாமம்உலகினில் மறவார்நம்மை
தெளிவுடன்பார்த்தேன் நாளும்திறமாய்க் காக்கவேணும்
பழிகொலை களவுபேயாட்டம் பழநீசக்குலங்கள் தன்னை
குளிர்சுளிர் நோயைத்தாக்கி கொன்றிடு உலகில்தானே

வேறு

சிவனே சிவஞானத் தேசிகனே
தேவர் தேவர்க்கும்தாயகமே
தவமே தவஞான தவக்கொழுந்தே
சர்வதயாபர சங்கரனே

சங்கம் நிறைந்தருள்தற்பரனே
தமியேன் உனதுட வருளாலிந்த
மங்கைபதிநாட்டில் தாமரையூர்
வளரும் தவம்செய்யும் மாயன் கைக்குள்

ஏவல் சீவாயிமாரெனவும்
ஏகனருள் கொண்ட ஒழுங்குடனே
காவல்காரராய் வரங்கள் வேண்டிக்
கருடரெனப்போர் தழைக்தோங்க

மூவுலோகம் தளைத்தோங்க
முதலோன் மகவெனகீர்த்திபெற்ற
காவபுகழ்கொண்ட கருடராசன்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அருள் நூல், அய்யா வழி, akilathirattu, arul nool, ayyavazhi